26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
oil face
அழகு குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பது எப்படி??

வெயில்காலம் தொடங்கிவிட்டது. இனிமேல் இரவிலும் கூட வீட்டில் வேர்த்து வடிய ஆரம்பித்துவிடும். இந்த வெயில் நாட்களில் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்வது மிகவும் கடினம். சிலருக்கு குளிர் காலங்களில் கூட முகத்தில் என்னை வழியும் பழக்கம் இருக்கும்.

oil face

பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்னை ஒன்றுதான் முகத்தில் எண்ணெய் வழிதல். ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வெயில்காலங்களில் சரும பிரச்சனை அதிகமாக ஏற்படும். வெயில்காலங்களில் முகத்தில் எப்பொழுதுமே எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், சிலரின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகள் உள்ளது.
எலுமிச்சை சாறு 4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்துவந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

கற்றாழை பிசினுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, சிறிதுநேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவினால். முகத்தில் எண்ணெய் வழிவது நின்று முகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. அதேபோல் துளசி இலையை கசக்கி, அதன் சாற்றை முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து முகம் கழுவினால் விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

Related posts

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

விஞ்ஞானிகள் சாதனை! இரத்தம் எடுக்காமல் சர்க்கரை பரிசோதனை செய்யும் புதிய கருவி!

nathan

வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி?

nathan

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…!

nathan

பாதங் கள் பாதுகாக்க‍ப்படுவதால் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!….

sangika

காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியல் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது சிறப்பாக பொருந்தும்.

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan