28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
face2
அழகு குறிப்புகள்

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள டிப்ஸ!…

சிலருக்கு முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு முகத்தில் பருக்கள், புள்ளிகள் தோன்றும். முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க.

face2

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு:

முட்டையின் வெள்ளைக்கரு – 1
கடலை மாவு – 1 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் முகத்தை உலர்த்தி, டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

இந்த ஸ்கரப் சருமத்தில் மிதமிஞ்சி செயல்படும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

தக்காளி மற்றும் பால் பவுடர்:

தக்காளி கூழ் – 2 டீஸ்பூன்
பால் பவுடர் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பௌலில் தக்காளி கூழுடன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். அதன்பின் நீர் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள். இந்த ஸ்கரப் சருமத்தில் பிசுபிசுவென்று இருக்கும் எண்ணெய் பசையைப் போக்கி, முகத்தின் பொலிவை மேம்படுத்தி, பிரகாசமாக காட்டும்.

நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:

நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்திக் காட்டும்.

Related posts

சுவையான மட்டன் கீமா சாக்

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால் ​கொடுத்த பிரபல நடிகை

nathan

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

இன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் நெயில் ஆர்ட்

nathan

சுரைக்காய் பருப்பு குழம்பு

nathan

பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா மகன்.! மகனை பார்த்தவுடன் கதறி அழுத மைனா.!

nathan

வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி, beauty tips in tamil

nathan