25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
face
அழகு குறிப்புகள்

முகம் பளபளப்பாக சில அழகு குறிப்புகள்…!

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்கை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடிவளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

face

ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் கோழி முட்டையில் கொஞ்சம் சக்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக் கொண்டு பிறகு தலைக்கு கூறிற வேண்டும்.

இதனால் எண்ணெய்ப் பசை நீங்கி முடி அழகு பெறும். தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும். வேப்பிலை புதினா சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் புசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முகம் வோடிக்குரு வராமல் வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். இளம் சூடான ஒரு லீற்றர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

Related posts

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan

கைகள் பராமரிப்பிற்கு சில டிப்ஸ் கள் இதோ…

sangika

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan

புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்

nathan

திருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….

sangika

பிகினி உடையில் போட்டில் புட் போர்ட் அடித்த காஜல் அகர்வால்

nathan

அரிசி கழுவிய நீரானது அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது.

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika