22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
beauty1 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது.

ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாவதற்கான வழிகளை பற்றி பாப்போம்.

beauty1 1

குங்குமப்பூ

முகக்கருமை நீங்கி வெள்ளையாக நினைப்பவர்கள், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் கூடுகிறது.

துளசி

துளசி பல மருத்துவக் குணங்களைக் கொண்ட சிறந்த மூலிகை ஆகும். இது சரும பிரச்சனைகளை போக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முக கருமை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் சருமப் பிரச்சனைகளை போக்காக கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சரும பிரச்சனைகளை நீக்கக் கூடிய தன்மை கொண்டது.

உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு காணப்படும்.

ஓட்ஸ்

சரும பொலிவை பெற விரும்புபவர்கள், ஓட்ஸை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை அதனை அரைத்து, புளித்த தயிரினை அதனோடு சேர்த்து, தினமும் காலையில் அதனை முகத்தில் தடவி வந்தால் மிகக் கருமை நீங்கி பொலிவுடன் காணப்படும்.

பால்பவுடர்

மிகக் கருமையை போக்க விரும்புபவர்கள், பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பொலிவை நாமே நம் கண்களால் காணலாம்.

Related posts

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

nathan

உடலில் உள்ள ரோமத்தை நீக்கும் குளியல் பவுடர்.

nathan

உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ!

nathan

இவ்வாறான உங்களின் செயற்பாடுகளினால் கண்களின் அழகுகள் பாதிக்கப்படுகின்றன!…

sangika

தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

nathan

பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா ?

nathan