24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
hi
தலைமுடி சிகிச்சை

முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேம்பு!…

தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.

hi

கூந்தல், சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் வேம்பு

வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை. “வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.

வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும்.

Related posts

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க… முடி சரசரனு வேகமா வளரும்!…

nathan

அழகை கெடுக்கும் நரை முடி

nathan

அடர்த்தியான தலைமுடிக்கு

nathan

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

ஏன் வெயிட் பண்றீங்க… கேரட் எண்ணெய் தயாரித்து தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான கூந்தலுக்கு இயற்கைக் குறிப்புகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan