27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
fat 2
அழகு குறிப்புகள்

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

fat 2

செய்முறை:

குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.

பலன்கள்:

வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.

மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.

Related posts

சரும நிறத்தைக் கூட்டுவது, பருக்கள், மங்கு, டாட்டூ நீக்குவது போன்ற எல்லாவற்றுக்கும் இந்தச் சிகிச்சை உதவும்

nathan

முக பருவை போக்க..

nathan

இதை நீங்களே பாருங்க.! துளி கூட மேக்கப் இல்லாமல் 15வயது பெண் போல் கியூட்டாக இருக்கும் நயன்தாரா.!

nathan

தீக்காயங்களுக்கான சிகிச்சை!….

sangika

கசிந்த தகவல் – செல்வராகவனுக்கு என்ன பிரச்சனை? இப்படி ஒரு ட்விட் போட்டிருக்காரே

nathan

மனோபாலாவின் மனைவி யார் என தெரியுமா?நீங்களே பாருங்களன்!!!

nathan

இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க பாத வெடிப்பு நீங்கும்

nathan

குறைபிரசவ குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனைமுறை தாய்ப்பால் தர வேண்டும்?

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் ரோமங்கள் நீங்க—

nathan