இந்தியாவில், வெவ்வேறு காலநிலைகள் மற்றும் எண்ணற்ற சீசன்கள் இருக்கின்றன. இந்தியாவின் முழு பரப்பளவிலும், அனைத்து வகையான காலநிலைகள் இருக்கிறது. தீவிரமான வானிலை மற்றும் காசு மாசுபாடு, சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வானிலை மற்றும் மாசுபாடு மட்டுமல்லாமல், புவிவெப்பமயமாதல், மன அழுத்தம், அதிகப்படியான சூரிய ஒளி, வேர்வை போன்றவற்றையும் சருமம் தாங்கவேண்டியுள்ளது.
வாழ்க்கைமுறை, தொழில்மயமாதல், கலாச்சார காரணிகள், சுகாதார பராமரிப்பு அணுகல், எழுத்தறிவு நிலை போன்றவற்றுடனும் தோல் தொடர்பான வியாதிகள் நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் படி, தோல் தொடர்பான நோய்தான் இந்தியாவில் பொதுவான தொற்று அல்லாத நொயாக இருக்கிறது.
இந்திய பெண்கள் மற்றும் ஆண்களை பாதிக்கும் தோல் வியாஅதிகள் பற்றி பார்க்கலாம்.
முகப்பரு:
முகப்பருவிற்கு பல காரணங்கள் இருக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை, சுற்றுச்சூழலில் உள்ள மாசுப்பொருட்களை ஈர்த்து, துளைகளை மறையச்செய்கிறது. இதுவே, முகப்பரு போன்றவற்றிற்கு காரணியாக அமைகிறது.
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், மன அழுத்தம், புகைப்பிடித்தல் போன்றவற்றால் கூட முகப்பருக்கள் ஏற்படும். தலையணை உரையை அடிக்கடி மாற்றாமல், அழுக்குப்படிந்த கைகளை சருமத்தில் வைப்பதால் கூட முகப்பருக்கள் ஏற்படும். சரியாயில்லாத உணவுமுறை, மற்றும் நொறுக்குத்தீனிகள் அதிக அளவு எடுத்துக்கொள்வது முகப்பரு ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது.
அதிக அளவு முகப்பரு இருந்தால், சரியான தோல் சிகிச்சை வல்லுநரிடம் சென்று ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. முகப்பருக்களை அகற்ற, உங்களுக்கு ஏற்ற சரும பாதுகாப்பு முறையை தினமும் பின்பற்றுவது நல்லது. வேம்பு , துளசி, கற்றாழை போன்ற பொருட்களாலான ஹமாம் சோப்பை பயன்படுத்தி, தினமும் உங்கள் சருமத்தை தூய்மைப்படுத்துதல், முகப்பருக்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும். எண்ணெய் தன்மை அற்ற மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது.
முதுகில் வரும் பரு:
பருக்கள், முகத்திற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரும்பாலான இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதுகிலும் பருக்கள் உருவாகிறது. அதற்கான காரணங்களும் அதிக அளவு இருக்கிறது. முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி போலவே முதுகிலும் எண்ணெய் சுரப்பிகள் இருக்கிறது. ஆதலால், மார்பு, மேல் தோள்பட்டை போன்ற பகுதிகளிலும் பருக்கள் வரும். மிக இருக்கமாக உடை அணிவது, உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு குளிக்காமல் இருப்பது, முதுகை சரியாக சுத்தப்படுத்தாமல் இருப்பது, மிக கடுமையான சோப்பு பயன்படுத்துவது, ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கிறது. ஹமாம் போன்ற சோப்புகள், உடலை நன்றாக சுத்தப்படுத்துவதற்கு உதவுகிறது.
வறண்ட சருமம்:
கோடை மற்றும் குளிர் காலங்களிலும், இந்தியாவில் மிகக் கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலைகள் இருக்கிறது. இதனால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள், வறண்ட சர்மம் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, வறண்ட சருமத்திற்கான காரணமாக இருக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது, சருமம் வறண்டு போவதை தடுக்கும். அதிக குளிரான அல்லது அதிக சூடான தண்ணீரை கொண்டு உடலை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக, குறைவான சூடுள்ள நீரை வைத்து குளிக்கவேண்டும். வெளியே தெரியும் தோல் பகுதிகளில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
வேர்க்குரு:
அதிகப்படியான வெப்பத்தால், வேர்வை சுரப்பிகள், தோலில் உள்ள துளைகள் போன்றவை அடைக்கப்பட்டுவிடுகிறது. இது, வேர்க்குரு வருவதற்கான காரணமாக இருக்கிறது. இதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பருத்தி ஆடைகளை அணிவது, தோலில் உள்ள துளைகள் சுவாசிக்க வழிவகுக்கும். தினமும் குளித்து, நம் தோலை சுத்தமாகவும் குளிர்ர்சியாகவும் வைத்திருக்கவேண்டும். கடினமான சோப்புகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளும்பொழுது, சரியான உடைகளை அணிந்து, உடற்பயிற்சி முடித்தவுடன் அதனை துவைத்துவிட வேண்டும். தண்ணிர் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் துற்நாற்றம்:
பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாக உடல் துர்நாற்றம் இருக்கிறது. நம் சதையில், பல அடுக்குகள் இருக்கிறது. அவற்றில், பாக்டீரியாக்கள் எளிதில் அடைந்துவிடமுடியும். உடலில் சுரக்கும் வேர்வை மற்றும் பாக்டீரியா இணைந்து, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை எப்படி தடுக்க முடியும்? மென்மையான சோப்பை பயன்படுத்தி, தினமும் குளிக்கவேண்டும். உடலில் உள்ள மடங்கும் பகுதிகளில் டால்கம் பவுடர் பயன்படுத்தவேண்டும். அக்குளில் வாசனை திரவியங்களை பயன்படுத்தவேண்டும்.
தோல் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள். தோல், உங்கள் உடலில் மிக பெரிதான உறுப்பு. அதனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!