25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
katralai 1
அழகு குறிப்புகள்

சரும பாதிப்பை கற்றாழை ஜெல் எப்படி தடுக்கிறது!….

நகரத்தின் மாசு உங்கள் உடல் நலத்தை மட்டும் பாதிக்காமல் உங்களது சருமத்தையும் பதம் பார்க்கிறது. இதனால் இள வயதிலேயே சருமம் முதிர்ந்த தோற்றமடைதல், கருமையடைதல், நிறம் மங்குதல், சுருக்கங்கள் தோன்றுதல், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுதல் மற்றும் சருமம் தனது நெகிழும் தன்மையை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காற்றிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமம் சீக்கிரமே முதிர்ச்சி தன்மையடைதலை ஊக்கப்படுத்துகின்றன.

நமது உடலில் மிகப் பெரிய உறுப்பாக சருமம் இருப்பதால் மாசு இதனை அதிகம் பாதிக்கிறது.

katralai 1

மாசு மற்றும் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இது பருக்களை ஏற்படுத்துகின்றன.

கிளென்சிங் மற்றும் சருமத்தை ஏக்ஸ்ஃபாலியேட் செய்வது மிகவும் அவசியமானது. அது போல சருமத்துக்கு போதிய ஈரப்பதத்தை அளிப்பதும் அவசியமாகும்.

ஈரப்பதம் அளிக்கும் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் பொருட்கள் நமது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன என்றே கூறலாம்.

கற்றாழை அது போன்ற பாதிப்புகளுக்கு பலனளிக்கும் ஒன்றாகும். ஈரப்பதம் அதிகமுள்ள செடி கற்றாழையாகும்.

கற்றாழையில் உள்ள கிளென்சர் மிகவும் மிருதுவானது மற்றும் அது சருமத்தை வறட்சியடைய செய்யாமல் சுத்தம் செய்கிறது.

கற்றாழை, எரிச்சல், சிவந்து போதல் மற்றும் அரிப்பு போன்ற மாசினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கிறது.

பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அது எதிர்த்து போராடுகிறது. கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதால் பருக்களால் ஏற்படும் வடுக்களும் நீங்குகின்றது.

கற்றாழையில் உள்ள ஆன்டி-அலர்ஜிக் குணங்கள் அதனை குணப்படுத்துகிறது. அது காயங்களையும் எரிச்சலையும் சரி செய்கின்றது. சோரியாசிஸ் மற்றும் எக்சீமாவுக்கும் கற்றாழை ஒரு சிறந்த தீர்வாகும்.

கற்றாழை கேக்டஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். அதன் இலைகளில் ஜெல் வடிவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

இந்த ஜெல்லில் பல வகையான விட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. அவை சருமத்துக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கக் கூடியவையாகும்.

சருமத்தை மென்மையாக்குவதில் கற்றாழை சிறந்த விளங்குகின்றது. அது காற்றை சுத்தப்படுத்தும் குணமும் கொண்டதாகும்.

எனவே, உங்களது வீட்டில் அல்லது ஆபீசில் கற்றாழை செடியை வைத்தால் அது காற்றிலுள்ள மாசினை குறைத்து சருமம் மற்றும் உடல் பாதிப்புகளில் இருந்து காக்கும்.

கற்றாழை ஜெல் மாசிலிருந்து சருமத்தை மிகவும் சிறப்பாக பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தை தாக்காத வண்ணம் அது அது சருமத்தின் மேல் ஒரு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகின்றது.

வியர்க்குரு மற்றும் சூரிய ஒளியினால் ஏற்படும் எரிச்சலையும் அது பெருமளவு குறைக்கிறது.

அதுலுள்ள சக்தி நிறைந்த ஆன்டியாக்சிடன்ட் சருமத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது.

கற்றாழை காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஸ்கின்கேர் பொருட்களில் பெருமளவு உபயோகிக்கப்படுகிறது.

லாக்மே ஆலோ டே க்ரீம் போன்ற பிராடக்ட் மற்றும் ஆக்வா ஜெல்லில் ஆலோ வேரா நிறைந்துள்ளது. அது சருமத்தை மிருதுவாக்கி, ஈரப்

தொடர்சியாக கற்றாழையை பயன்படுத்துவதால் சருமம் போதுமான ஈரப்பதத்துடன் காட்சியளிக்கும்.

கற்றாழை ஜெல் சருமத்தில் பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளாமல், சருமத்துடன் ஒன்றென கலந்து ஈரப்பதம் அளித்திடும்.

இதனை நீங்கள் பிரைமராகவும் பயன்படுத்தலாம். உங்களது மேக்கப் சீராக முகமெங்கும் பரவிட இது உதவுகிறது.

கற்றாழையின் நன்மைகளை மேலும் மேலும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். கற்றாழை நிறைந்துள்ள ஒரு பிராடக்ட் கண்டிப்பாக அனைவருக்கும் நன்மையளிக்க கூடியதாகும்.

கற்றாழையை அடிப்படையாக கொண்ட பிராடக்டுகள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், பருக்கள், சொரசொரப்பு, பொலிவ்உ, குறைதல், வறட்சி, இளவயதிலேயே சருமம் முதிர்ச்சியடைதல், வெயிலினால் ஏற்படும் நமைச்சல், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கம் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

சரும பிரச்சினைகளை பொருத்த வரையில், கற்றாழையால் சரி செய்ய முடியாதது என்று எதனையும் நம்மால் சுட்டிக்காட்டவே முடியாது.

பதம் அளித்து பாதுகாக்கிறது. குளித்து விட்டு வந்தவுடன் மற்றும் முகத்தை ஒவ்வொரு முறை கழுவி முடித்ததும் பூசுவதுடன் உங்களது சரும பராமரிப்பு நடைமுறைகளிலும் இதனை உட்படுத்தலாம்.

எனினும், சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள இது ஒரு பாதுகாப்பு படலத்தையும் ஏற்படுத்துகிறது. கற்றாழையின் குளிச்சியூட்டும் அம்சம் சருமத்துக்கு இதமாக இருக்கும்.

Related posts

மிருதுவான சருமத்திற்கு

nathan

சூப்பரான …வாழைக்காய் கோப்தா

nathan

நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! சட்டப்படி விவாகரத்து…

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை வனிதா

nathan

கருப்பு உதடுகளை நிரந்தரமாக ரோஜா பூ நிறமாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

அம்மாடியோவ் என்ன இது ? நடிகர் நடிகைகளுடன் ஃபுல் போதையில் தலைக்கேறிய திரிஷா!

nathan

தனுஷ் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு ஆளா? -வெளிவந்த தகவல் !

nathan