23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
face3 1
அழகு குறிப்புகள்

முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்!

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நன்கு பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

* கோஸ் இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து, ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

face3 1

 

* நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும்.

அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

* கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

* ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும்.

கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும்.

வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

* பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

* ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

Related posts

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

nathan

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan

அழகு ஆலோசனை!

nathan

இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

nathan

மூக்கு மற்றும் காது பராமரிப்பு

nathan

முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்

nathan

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan