25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
thakkali
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தக்காளி தரும் தங்க நிறம்!…

தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது. தக்காளியை எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்:

thakkali

* பழுத்த தக்காளியைப் பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை, கருமை நிறம் மறையும்.

* தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.

தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

* ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.

* நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

* 3 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, 2 தேக்கரண்டி மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும்.

வாரம் இருமுறை இதுபோன்று செய்து வர வேண்டும்.

* 2 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

* 1 தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

Related posts

முகத்தில் அசிங்கமாக குழிகள் உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan

கரும்புள்ளிகள் எளிதில் நீங்க ஃபேஸ் மாஸ்க்’ ..

nathan

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

nathan

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே நாளில் நிச்சயதார்த்தம்!

nathan

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….

sangika