beauty 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். முட்டைகளை சமைத்த பின்னர் ஓட்டை தூக்கி எறிந்துவிடாமல் அதன் ஓட்டை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதனை பயன்படுத்தி எவ்வாறு முகத்திற்கு மாஸ்க் தயாரிப்பது என்று பார்க்கலாம். முட்டை ஓட்டு பொடியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் சாம்பலை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை முகத்தில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். முட்டை ஓட்டினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். கழுவிய உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இதனை வாரம் ஒரு முறை செய்து பாருங்கள்.

beauty 1

முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட முகம் பளிச்சென்று இருக்கும். 2 டீஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் மற்றும் கடலை மாவு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம். 2 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் சேர்த்து கலந்து அதை கண்களைச் சுற்றி உள்ள சருமப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரவு தூங்கும் முன்பு மறக்காமல் செய்து வாருங்கள்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் இருக்கும். வெயிலினால் ஏற்படக் கூடிய சரும எரிச்சல் போன்றவற்றை முட்டையின் ஓடு பயன்படுத்துவதால் சரி செய்து விடலாம்.

ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஓற விட வேண்டும். பின்னர் அந்தக் கலவையை சருமத்தில் தடவி வந்தால் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகி விடும்.

கற்றாழை ஜெல்லுடன் முட்டை ஓடு பொடியை சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஓற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

Related posts

சருமத்தை காக்கும் உணவுகள்

nathan

முகம் பொலிவு பெற அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்

nathan

ஆலிவ் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தினால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன?

nathan

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

sangika

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

ஜில்லுன்னு ஒரு ஐஸ் தெரப்பி!

nathan