25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
breast
அழகு குறிப்புகள்

மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள வழிகள்!…..

நமது அழகை பாதுகாப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. காரணம் நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் ஆகியவற்றை கூறலாம். முக அழகு முதல் உடல் அழகு வரை எல்லாவற்றையும் இது போன்ற காரணிகள் தான் நிர்ணயிக்கின்றன. முக அழகை மேம்படுத்த பல குறிப்புகள் உள்ளது.

ஆனால், உடல் அழகை மேம்படுத்த மிக சில குறிப்புகளே உள்ளன. அந்த வகையில் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ செய்வோம். அதில் மார்பகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்களும் அடங்கும். இதை நீக்க இனி பெரிய அளவில் எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக இந்த பதிவில் கூறும் வழிகளை பின்பற்றினாலே போதும்.

breast

தூங்கும் முறை

மார்பக பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். பின்புறமாக கவுந்து அடித்து படுத்தால் இது போன்ற சுருக்கங்கள் மார்பு பகுதியில் ஏற்பட கூடும். மேலும், மார்பகங்கள் விரைவிலே தொங்கி விடவும் வாய்ப்புகள் உள்ளது.

கற்றாழை

அவ்வப்போது உங்கள் மார்பகங்களை கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யுங்கள். இவை வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை தரும். மேலும், இது போன்ற சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

குளியல் முறை

குளிக்கும் போது மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்றுவதை தவிர்க்கவும். இப்படி அதிக வெப்பம் நேரடியாக மார்பு பகுதியில் படுவதால் சுருக்கங்கள் உண்டாகும். எனவே, இனி குளியல் முறையை மாற்றி கொள்ளுங்கள்.

உள்ளாடை

உள்ளாடையை சரியான அளவில் அணியாமல் இருந்தால் மார்பகத்தில் சுருக்கங்கள் உண்டாகும். உங்களின் மார்பக அளவிற்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது எல்லா வகையிலும் நல்லது.

உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க முற்படும் போது மார்பக பகுதியில் உள்ள தசைகள் சுருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் போன்றவற்றை எடுக்கும் போது குறைந்த அளவில் எடுப்பது நல்லது.

மசாஜ்

அவ்வப்போது மார்பக பகுதியில் கைகளால் மசாஜ் கொடுப்பது நல்லது. ஏனெனில் இரத்த ஓட்டத்தை சீராக மார்ப்பு பகுதியில் எடுத்து செல்வதற்கு இதுவும் வழி செய்யும். மார்பு பகுதியை இலகுவாக்க மசாஜ் சிறந்த வழியாகும்.

சன்ஸ்க்ரீன் லோஷன்

வெளியில் போகும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு கொண்டு செல்வது நல்லது. இது சூரிய ஒளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும். மார்பக பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.

source: boldsky.com

Related posts

tips for soft feet-மென்மையான கால்களுக்கு

nathan

இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா! இந்த உடை எப்படி பாடில நிக்குது.. டாப் ஆங்கிள் மொத்தமும் தெரியுது என கலாய்க்கும் ரசிகர்கள்

nathan

ரம் ஃபுரூட் கேக் ரெசிபி

nathan

இளம்பெண் மீது இளைஞர் பரபரப்பு புகார்!

nathan

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

nathan

இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க…

nathan

நீங்களே பாருங்க.! 60 வயதில் 35 வயது நடிகையை மணந்த இயக்குனர் வேலு பிரபாகரன்.

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan