24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
face3
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு மிக அதிகமான ஒப்பனைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில, நமது சருமத்தை பாதுகாப்பதற்கும் மேக்-அப் அதிக நேரம் நிலைக்கவேண்டும் என்பதற்காகவும் சில பொருட்கள் இந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேக்-அப் போடுவதற்கு முன்னர் பயன்படுத்தப்படும் ப்ரைமர்களால், ஒப்பனைக்கலைஞர்கள் பலர், பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.

உதடு மற்றும் கண் தொடர்பான அனைத்து ஒப்பனைகளுக்கும் என தனித்தனி ப்ரைமர்கள் மார்கெட்டுகளில் கிடைக்கின்றன.

ஆனால், ப்ரைமர் வாங்குவதற்கு முன்னர், உங்கள் சருமத்தின் வகையை சரிபார்ப்பது மிக அவசியமானது.

face3

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்:

1. உங்கள் மேக்-அப் அல்லது ஃபவுண்டேஷன் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கவேண்டும் என நினைத்தால், அதனை ப்ரைமர் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஃபவுண்டேஷன் நீண்ட நேரம் இருப்பதற்கு ப்ரைமர் உதவும்.

2. ஏர் ப்ரஷிங் தற்போது பயன்பாட்டில் உள்ளதால், எந்தவித ஃபவுண்டேஷனாக இருந்தாலும், ப்ரைமர் ஒத்துப்போகும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

3. உங்கள் சருமத்தில் துளைகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவை இருந்தால், அதனை மறைக்க, ப்ரைமர் உதவுகிறது. சிலிக்கான் அல்லது ஜெல் போன்ற ப்ரைமர், சருமத்தில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்ய உதவும்.

4. உங்கள் சருமத்தில் வெடிப்புகள் அதிக அளவில் இருந்தால், மேக்-அப் போடும்போது ஏற்படும் வெடிப்புகளை தடுக்க ப்ரைமர் உதவுகிறது.

சருமத்திற்கும், ஒப்பனைக்கும் இடையிலான ஒரு தடுப்பாக ப்ரைமர் அமைவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள துளைகளை அடைப்பதற்கு ப்ரைமர் உதவுகிறது.

5. உங்கள் ப்ரைமர், சரியாக பயன்படவில்லை என நீங்கள் நினைத்தால், நீங்கள் சரியான ப்ரைமரை தேர்ந்தெடுக்கவில்லை என்று புரிந்துகொள்ளுக்கள்.

வறண்ட சருமம் கொண்டவர்கள், ஈரப்பதத்தை ஏற்படுத்தும் ப்ரைமரை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள், எண்ணெய்ப்பசை தேங்குவதை தடுக்கும் வகையிலான ப்ரைமர்களை பயன்படுத்தவேண்டும்.

6. ப்ரைமர் வாங்குவதற்கு முன்னர், நீங்கள் வைத்திருக்கும் ஃபவுண்டேஷனுடன் அதனை கலந்துபார்ப்பது நல்லது.

தண்ணீர் போன்ற ஃபவுண்டேஷனிற்கு, சிலிக்கான் ப்ரைமர் சிறந்த முடிவை தராது. உங்கள் மேக்-அப் , சிறிதுநேரத்தில் வழிய தொடங்கிவிடும்.

ஆதலால், அழகுசாதன பொருட்களை வாங்குவதற்கு முன்னர், உங்களிடம் உள்ள பொருட்களுடன் அவை சரியாக பொருந்துமா என்பதை பார்த்துவிடுவது நல்லது.

7. கண்களுக்கான ஒப்பனையில், ப்ரைமர் மிகவும் அத்தியாவசியமானது. நீங்கள், கண்களுக்கு என்னவிதமான தோற்றத்தை ஏற்படுத்தபோகிறீர்கள் என்பதற்கு உதவும். கண்களில் போடப்படும் மேக்-அப். நீண்ட நேரம் நீடிக்க, ப்ரைமர் உதவும்.

மேலும், இது தண்னீர் புகா தன்மை கொண்டதால், ஐ ஷாடோவிற்கு முன்னர் ப்ரைமரை பயன்படுத்துவது மேட் ஃபினிஷுடன் கூடிய மிருதுவான கண் இமையை கொடுக்கும்.

8. கண்களில் போடப்படும் மேக்-அப், கண்ணின் இறுதியில் கலைந்துவிடுவதை போன்று உடைந்தால், அதனை தடுக்க, ஐ ப்ரைமர் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

9. நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கிற்கு தகுந்த லிப் லைனரை தேர்ந்தெடுப்பதில், நாம் அனைவருக்கும் மிகப்பெரிய சிக்கல் இருக்கும்.

ஒவ்வொரு லிப்ஸ்டிக்கிற்கும் ஏற்ற லிப் லைனரை வாங்குவதற்கு செலவிடுவதற்கு பதில், லிப் ப்ரைமரை பயன்படுத்தலாம். இது மிகச்சரியானதாகவும், லிப் லைனருக்காக செலவிடும் பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவுகிறது.

தற்போதெல்லாம், ப்ரைமர் இருக்கக்கூடிய பல அழகுசாதன பொருட்கல் சந்தையில் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, ப்ரைமரால் தயாரிக்கப்பட்ட ஃபவுண்டேஷன் அதிக அளவில் கிடைக்கிறது. இதுவே, லிப் ப்ரைமருக்கும் பொருந்தும்.

நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னாள், அதனை சோதனை செய்து பார்ப்பது நல்லது. சரியான அழகுசாதன பொருட்களை வாங்குவதற்கு, நீங்கள் எந்தவிதமான சருமத்தை கொண்டவர்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். தரமான ப்ரைமரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுங்கள்.

நீங்கள் ஏதாவது ஒரு விழாவிற்கோ பார்டிக்கோ செல்கிறீர்கள் என்றால், அதற்கு முந்தைய நாளே ஒருமுறை மேக்-அப் போட்டு, அது உங்களுக்கு சரியானதாக இருக்கிறதா என்று பார்த்துவிடுவது நல்லது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…15 நிமிஷத்துல உங்க முகம் பளிச்சின்னு ஆயிடும்.!

nathan

பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

nathan

தமிழ்நாட்டு பெண்கள் கருப்பா இருந்தாலும் கலைய இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

உங்க கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

சித்ராவின் மரணத்தில் அடுத்த புதிய திருப்பம்.. கழுத்தில் துணிமாட்டியதும் துடிதுடித்தார்..

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு

nathan

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

முப்பது வயதில் முகச் சுருக்கங்களுக்கு பை பை சொல்லுங்கள்!!

nathan

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

sangika