29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
802025507335af1496fe50f8a34314be3126ca4c
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! இரவு படுக்கச் செல்லும் முன்பாக இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி பாருங்க….!

அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.

தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும். எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும். தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும். தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும். முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும். பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்.

802025507335af1496fe50f8a34314be3126ca4c 445738097

Related posts

கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு மாஸ்க் பருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்யும்!

nathan

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

nathan

தெரிந்துகொள்ளுங்கள்! லிப்ஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

nathan