24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1554271956
அழகு குறிப்புகள்முகப்பரு

எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்…அதுவும் வீட்லயே.. இந்த பருக்களை

குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் முக அழகில் பிரச்சனையாகத் தோன்றுவது கட்டிகள் மற்றும் பருக்கள். பருக்கள் முகத்தில் ஏற்படுவதால் முகத்தின் கவர்ச்சி குறையும். பருக்கள் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவை வந்தவுடன் அவற்றைப் போக்க சில முயற்சிகளை செய்ய முடியும்.

2 1554271956

பருக்கள்
பருக்கள் என்பது பொதுவாக சரும துளைகளில் படியும் அழுக்கு கட்டியாக மாறி, சருமத்தில் வெளிப்படும் நிலையாகும். இந்த கட்டிகள் சருமத்தில் முளை போல் வெளியில் முட்டிக் கொண்டு நிற்கும், ஆனால் இப்படி முளை இல்லாமல் வெறும் சிவப்பு நிறத்தில் கட்டிகள் போல் தோன்றும் பருக்கள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? அந்த வகை பருக்கள் முளை இல்லாத பருக்கள் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Blind Pimple என்று கூறுவர். இந்த வகை பருக்கள் வெளியிலிருந்து பார்க்கும்போது பருக்கள் போல் தோற்றமளிப்பதில்லை. ஆனால் இதன் வலி தாங்க முடியாததாக இருக்கும். சருமத்திற்கு அடியில் நரம்புகளுக்கு அருகில் உண்டாகும் காரணத்தால் இது மிகுந்த வலியைக் கொடுக்கிறது.

என்ன செய்யலாம்?
இந்த வகை பருக்கள் தானாக வருவதில்லை. இவை உண்டாக சில குறிப்பிட்ட காரணம் உண்டு. மேலும் இதனைப் போக்க தீர்வுகளும் உண்டு. செயற்கை வழிமுறைகள் மற்றும் தொழில்சார் கருவிகள் கொண்டு இதனைப் போக்குவது பற்றி நாம் இப்போது கூறப் போவதில்லை. முற்றிலும் இயற்கையான முறையில் பருக்கள் பாதிக்கபட்ட சருமத்திற்கு தீர்வு காணவிருக்கிறோம்.

சூடான ஒத்தடம்
சூடான பொருள் கொண்டு ஒத்தடம் கொடுப்பதால், சரும துளைகள் திறந்து, கிருமிகள் தானாக சருமத்தில் இருந்து வெளியாகி விடலாம். பருக்கள் வெளியேறும் வரை அல்லது தானாக கருகும் வரை தினமும் 5-10 நிமிடம் சூடு ஒத்தடம் தருவதால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் எந்த ஒரு தழும்பும் இல்லாமல் பருக்களைப் போக்க முடியும்.
1 155427195055

அக்னே ஸ்டிக்கர் பயன்படுத்தலாம்
திடீரென்று ஏதாவது ஒரு பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு போக வேண்டிய சூழல் உருவாகலாம். அந்த நேரத்தில் மெதுவான செயல்பாடுகள் மூலம் பருக்களைப் போக்க நினைப்பது சரியான தீர்வாக இருக்கது. ஆகவே அந்த சூழலை எதிர்கொள்ள உடனடித் தீர்வாக, பிம்பிள் ஸ்டிக்கர் பயன்படுத்தலாம். பருக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் ஒரு ஸ்டிக்கர் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த ஸ்டிக்கரை மாற்றிக் கொள்ளலாம். அக்னே ஸ்டிக்கர் பல வகைகளில் உண்டு. சாதாரண ஸ்டிக்கரும் உண்டு. ஆனால் சலிசிலிக் அமிலம், டீ ட்ரீ எண்ணெய், பென்சாயில் பெராக்ஸைடு போன்ற மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதனைப் பயன்படுத்துவதால் தழும்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தேன் தடவலாம்
எந்த ஒரு கொப்பளமும் இன்றி பருவைப் போக்க, சிறிதளவு தேன் எடுத்து அந்த பருவில் தடவலாம். தேனுக்கு பக்டீரியா எதிர்ப்பு பண்பு இருப்பதால், இந்த வகை பருக்களைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது. தேன், பக்டீரியா எதிர்ப்பி மட்டுமல்ல நுண்ணுயிர் கொல்லியாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் தேன் ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட். தேனுக்கு இருக்கும் சுத்தீகரிப்பு தன்மை, முகத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்ற உதவும்.
6 1554271982

டீ ட்ரீ எண்ணெய் சிகிச்சை
டீ ட்ரீ எண்ணெய் முழுக்க முழுக்க பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஒரு பொருள். அதனால், முளை இல்லாத பருக்களை முகத்தில் இருந்து வெளியேற்ற இது சிறந்த வகையில் உதவுகிறது. சுத்தமான டீ ட்ரீ எண்ணெய்யை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஆகவே மற்ற எண்ணெய்களான ஜோஜோபா எண்ணெய், தேங்காய் என்னை அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்த பின் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவை எண்ணெய்யை பருக்களில் தடவி, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் முகத்தைக் கழுவலாம். பருக்கள் மறையும் வரை இந்த செயல்பாட்டை பின்பற்றலாம்.

7 1554271990

குளிர் ஒத்தடம்
நேரடியாக ஐஸ் கட்டிகளை முகத்தில் வைப்பது ஆபத்தானது. பருக்களுக்கு மென்மையான முறையில் குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஐஸ் பேக்கை பருக்களில் 5-6 நிமிடங்கள் ஒத்தி எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் கட்டிகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைவதை உங்களால் காண முடியும்.

Related posts

முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள்…..

sangika

வெளிவந்த தகவல் ! நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய ‘பப்ளிசிட்டி திருடன்’ சிக்கியது எப்படி?

nathan

அழகு குறிப்புகள்….சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம்….

nathan

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்!

nathan

வெளிவந்த தகவல் ! பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!..

nathan

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika

கடலை மாவை எதனுடன் கலந்து பயன்படுத்தனும் பிங்க் நிற சருமத்தை பெற?

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள்

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika