23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
5 6771
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்…!

இந்த இயற்கை முறையிலான சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள கருமை நீங்கி, மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.
முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை அணிந்தால், அது அக்குளை மேலும் கருமையாக்கும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

மஞ்சள் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்: 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர்.

செய்முறை: ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் கருமை நீங்கி மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

பேக்கிங் சோடா சிகிச்சை தேவையான பொருட்கள்: ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

செய்யும் முறை: தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். பின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லாவிட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சிகிச்சைகளை வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதைத் தடுக்கலாம். எனவே இனிமேல் கெமிக்கல் கலந்த பொருட்களால் அக்குள் முடிகளை நீக்காமல், இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.5 6771

Related posts

உங்களுக்கு அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!

nathan

மென்மையான சருமம் வேண்டுமா?

nathan

Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!

nathan

சரும சுருக்கத்திற்கு குட் பை சொல்லும் இயற்கை ஃபேஸ் பேக்

nathan

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

nathan

பரு, கருந்திட்டு, கருவளையம்… அசத்தல் தீர்வுகள்! அழகு குறிப்புகள்!!

nathan

பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர காரணம்

nathan

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க

nathan

அழகுக் குறிப்புகள்

nathan