32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
Collagen Facial jpg 1054
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ப்ளீச்சிங் செய்ய…!

இயற்கை முறையிலேயே வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.
தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப் போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.

முட்டையை உடைத்து, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்சிடும்.

கடலை மாவு, தயிர், மஞ்சள் இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தோளில் உள்ள சுருக்கங்கள், மரு போன்றவை நீங்கிவிடும்.

உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவேண்டும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவுடன் மிளிரும்.

காரட் எடுத்து நன்கு கூழாக அரைத்து அத்துடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி விடவும். நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று இருக்கும்.

தினமும் காலையில் இளநீர் பருகினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் சிறிது எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதே கலவையில் சிறிது எடுத்து தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் சருமம் அழகாக தோன்றும்.istockphoto 6737996 beautiful woman receiving facial treatment at a health spa 1

Related posts

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்

nathan

முதல் முறையாக இரண்டாம் முறை பணப்பெட்டி டாஸ்க்கை கொடுத்த பிக் பாஸ்

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

அடேங்கப்பா பிகினி உடையில் மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ நடிகை!

nathan

பரு

nathan

உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

இதோ ஈஸியான டிப்ஸ்.. எப்போதும் இளமையாக இருக்க ……

nathan

முயன்று பாருங்கள்.. தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

nathan