எகிப்தைச் சேர்ந்த மடிஷன் குலீவ்வர் என்கின்ற ஏழு வயதுச் சிறுமிக்கு மருதாணி அலங்காரம் பாரிய தொற்று நோயை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெற்றோர் பாடசாலை விடுமுறையின் போது தமது மகளுக்கு விடுதி ஒன்றில் இவ் அலங்காரத்தைச் செய்துள்ளனர். அது ஓரிரு நாட்களிலேயே அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது, மகள் வேதனையில் துடிப்பதைக் கண்ட பெற்றோர் அவரை ஒரு சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்திருக்கின்றனர் ஆயினும் அது குறைந்த அளவில் இல்லை.
மேலும் இவ்வகையான மருதாணி அலங்காரங்கள் அனைவரது சருமங்களுக்கும் ஏற்றதாக அமைவதில்லை என்றும் அவ் தொற்று ஏற்பட்டால் அது உடல் முழுவதையும் பாதிக்கக் கூடும் எனவும் சிகிச்சையளித்த மருத்துர்கள் தெரிவித்திருந்தனர்.
தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய இவ்வகை அலங்காரங்களை பாதம் போன்ற பகுதிகளில் பரிசோதித்த பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.