26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
dry
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

நமது முக அழகு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நாம் செய்கின்ற ஒரு சில தவறுகள் தான் நமது அழகை முற்றிலுமாக பாதிக்கிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு சில வழி முறைகள் உள்ளது. ஆனால், அதன் பின் முகத்தில் உள்ள வறட்சி அப்படியே தான் நீங்காமல் இருக்கும்.

இது போன்ற நிலையை சரி செய்ய நாம் என்னென்னவோ செய்வோம். ஆனால், இவற்றிற்கு சரியான தீர்வை நம்மால் அடைய இயலாது. முகத்தை அழகாக வைத்து கொள்ள எப்போதுமே ஈரப்பதமான மென்மையான முகம் அமைப்பு இருந்தாலே போதும். சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் பல பாதிப்புகள் உண்டாக தொடங்கும்.

இப்படி முகத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளை எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள் உள்ளது அதுவும் வீட்டிலே இருக்க கூடிய மூலிகைகளை வைத்து சருமத்தை மிகவும் மென்மையாக மாற்றி விடலாம். இதை எவ்வாறு செய்வது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

dry

சொரசொரப்பு

சருமம் பார்ப்பதற்கு மிகவும் வறண்டு காணப்பட்டால் அதை சரி செய்ய வேதி பொருட்கள் நிறைந்த கிரீம்களை பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.

இதற்கு மாறாக இயற்கை முறையிலான மூலிகைகளை பயன்படுத்தினால் சிறந்தது. முகம் மற்றும் தோல் வறண்டு போனால் இதனால் கீறல்கள், அரிப்பு, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகுமாம்.

புதினா

சருமத்தை மிருதுவாக வைத்து கொள்ள புதினா சிறப்பான தேர்வாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளதால் முகத்தின் வறட்சியை குறைத்து மென்மையை கூட்டும்.

மேலும், குளிர்ச்சியான சருமத்தை பெறவும் இதுவும் உதவும்.

பெருஞ்சீரகம்

பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை விரட்டி அடிக்க தன்மை இந்த வீட்டு மூலிகைக்கு உண்டு. சருமத்தில் இதை பயன்படுத்தினால் எப்போதுமே இளமையாக இருக்கலாம்.

அத்துடன் முக சுருக்கங்கள், கோடுகள், கரு வளையங்கள் போன்றவற்றையும் இது தடுக்கும்.

வேம்பு

எல்லாவித சரும பிரச்சினைக்கும் சிறப்பான தீர்வை தர இந்த மூலிகை உதவும். முக்கியமாக பாக்டீரியாக்களினால் ஏற்பட்ட சரும பாதிப்பு, சொறிகள், அரிப்பு, எரிச்சல் முதலிய பல பாதிப்புகளுக்கு இது தீர்வை தரும். அத்துடன் முகத்தை ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளும்.

சீமை சாமந்தி

இது ஒரு பூவாக இருந்தாலும் இதில் எண்ணற்ற மூலிகை தன்மை உள்ளது. முக்கியமாக முக வறட்சியை கட்டுப்படுத்தி மென்மையான சருமத்தை தருவதற்கு இது உதவும்.

அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த பூ பயன்படுகிறது. இதை பல வித ஆய்வுகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

கற்றாழை

சருமம் மிகவும் மென்மையாக இருக்க மிக எளிமையான வழி இது தான். கற்றாழையை வாரத்திற்கு 2 முறை தோலில் தடவி வந்தால் நேரடியாக ஈரப்பதத்தை தரும்.

அத்துடன் இதனால் சருமம் மிகவும் மென்மையாக மாறும். முக வறட்சியை விரட்ட இந்த முறை தான் சிறப்பானது.

லாவெண்டர்

சருமத்தை மென்மையாக வைத்து கொள்ள லாவெண்டர் உதவும். இதை பல வித அழகு சார்ந்த பொருட்களுக்கு பயன்படுத்தி வர இதன் மூலிகை தான் முதற்காரணம். இதை முகத்தில் இவ்வாறு பயன்படுத்த தேவையான பொருட்கள்…

லெவெண்டர் பூக்கள்

பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் லாவெண்டரை அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் மென்மை பெறும்.

Related posts

அம்மா நடிகையின் மோசமான டான்ஸ் வீடியோ ! ‘ஊ சொல்றியா’ பாட்டுக்கு ஆடுற வயசா இது..

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…

sangika

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்.

nathan

தெரிஞ்சிக்கங்க…முக அழகை அதிகரிக்க சூப்பரான ஃபேஸ் மாஸ்க்!

nathan

உங்களுக்கு எந்த மாதிரியான சருமம்? எப்படி தெரிஞ்சுக்கலாம்?

nathan

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

sangika