25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
nails3
அழகு குறிப்புகள்நகங்கள்

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

பொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும். ஆனால் நகம் வளர்ப்பது அனைவருக்கும் எளிதான ஒரு காரியம் அல்ல. சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துவிடுவதால் அதனை நிர்வகிப்பது சற்று கடினமான செயலாக இருக்கும்.

நகங்கள் நீளமாக வளரும் வரை காத்திருந்து திடீரென்று அவை ஏதோ ஒரு காரணத்தால் உடைய நேரிடும்போது அதனை அழகு படுத்த நீங்கள் செய்த கற்பனை எல்லாம் அம்பேல். நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இந்த பதிவில் சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்வதால், நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர்கின்றன. மேலும் இவை உடையும் வாய்ப்பும் குறைகிறது. முயற்சித்து பார்த்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

nails3

எலுமிச்சை

மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்க இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு சிறந்த தீர்வாகும். எலுமிச்சையில் உள்ள வைடமின் சி மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை நகங்கள் உடையாமல் இருக்க உதவுகின்றன. எலுமிச்சை நகத்தை வலிமையாக வைத்து நீளமாக வளர உதவுகிறது.

செய்முறை 1

1. அரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். 2. தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். 3. இந்த எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 10-15 நிமிடங்கள் ஊற விடுங்கள். செய்முறை 2 எலுமிச்சையை நறுக்கிவிட்டு, அதனை உங்கள் விரல் நகத்தில் சில நிமிடங்கள் தொடர்ந்து தேய்க்கவும். எலுமிச்சை சாறு உங்கள் நகம் முழுவதும் படர்ந்து காய்ந்து விடும். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்வதால் உங்கள் நகம் வலிமையாவதை உங்களால் உணர முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம். தேங்காய் எண்ணெய் கொண்டு விரல் நகங்களை மசாஜ் செய்வதால் அவை வலிமையடைகின்றன. நகங்களின் வேர் தேங்காய் எண்ணெயால் வலிமை அடைகிறது.

செய்முறை

1. அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

2. இதனுடன் 1/4 கப் தேன் மற்றும் நான்கு துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும்.

3. இந்த எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சூடாக்கவும்.

4. இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை 15 நிமிடம் ஊற விடவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? தினமும் இப்படி செய்வதால் உங்கள் விரல் நகம் வேகமாக வளரும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் விரல் நகங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. இவை விரல் நகங்களுக்குள் எளிதில் ஊடுருவுகிறது. ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சையின் கலவை, நகங்களுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவை உடையாமல் பாதுகாக்கின்றன.

செய்முறை

1. 3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். 2. இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை ஊற விடவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

முட்டை ஓடுகள்

ஒவ்வொரு முறையும் நாம் முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓடுகளை வீசி விடுகிறோம். ஆனால் அவை, விரல் நகங்களின் வேகமான வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவுகின்றன.

செய்முறை

1. உங்களுக்குத் தேவையான பொருட்கள் , முட்டை ஓடுகள், ஆளி விதைகள் மற்றும் பாதாம்.

2. முட்டை ஓடுகளைத் தூளாக்கிக் கொள்ளவும்.

3. பாதாம் மற்றும் ஆளி விதைகளையும் தூளாக்கிக் கொள்ளவும்.

4. இந்த தூளை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

5. வெதுவெதுப்பான பாலில் இந்த தூளை சேர்த்து உங்கள் நகங்களில் தடவவும்.

6. சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் இந்த முறையை பின்பற்றுங்கள். உங்கள் நகங்கள் நீளமாகவும் வலிமையாகவும் வளர்வதை உங்களால் பார்க்க முடியும்.

ஆரஞ்சு சாறு

நகங்களுக்கு ஆரஞ்சு சாறு பயன்படுத்துவதால் விரல் நகங்கள் வேகமாக வளர்ந்து வலிமையுடன் இருக்கும்.

செய்முறை

1. ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

2. அந்த ஆரஞ்சு சாற்றில் உங்கள் விரல் நகங்களை 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.

3. பிறகு வெதுவெதுப்பான நீரில் நகங்களைக் கழுவவும்.

4. நகங்கள் நன்கு காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.

ஹார்ஸ் டெயில்

ஹார்ஸ் டெயில் என்பது ஒரு மூலிகை. இதில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் குறைப்பாடு இன்றைய நாட்களில் பலருக்கும் உள்ளது. கால்சியம் குறைபாடு இருப்பதால் நகம் பலவீனமாகி, வளர்ச்சியும் குறைகிறது. ஆகவே ஹார்ஸ் டெயில் கொண்டு உங்கள் நகங்களுக்கு சிகிச்சை அளிப்பதால் நகம் குறித்து உங்கள் தொந்தரவுகள் காணாமல் போய்விடும்.

செய்முறை:

1. காய்ந்த ஹார்ஸ் டெயில் 3/4 ஸ்பூன் எடுத்து கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போடவும்.

2. ஹார்ஸ் டெயில் மூலிகை நீரில் நன்றாக கொதிக்கும்படி 5 நிமிடங்கள் வைக்கவும்.

3. பிறகு அந்த மூலிகையை வட்டிகட்டி, நீரை ஆற விடவும்.

4. இந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 20 நிமிடம் ஊற விடவும். எத்தனை முறை இதனை செய்யலாம்? ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்று ஒரு மாதம் தொடர்ந்து இதனைப் பின்பற்றி வரலாம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து உங்கள் நகங்கள் வேகமாகவும் வலிமையாகவும் வளர உதவுகின்றன.

செய்முறை:

(இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த முறையைப் பின்பற்றவும்)

1. ஆளி விதை எண்ணெய்யை மிதமாக சூடாக்கவும்.

2. 5-7 நிமிடங்கள் வரை உங்கள் நகங்களை அந்த எண்ணெயில் ஊற விடவும்.

3. இரவு முழுவதும் கைகளுக்கு க்ளௌஸ் அணிந்து கொள்ளவும். இதனால் இந்த எண்ணெய்யை உங்கள் நகங்கள் உறிஞ்சிக் கொள்ள இயலும். எத்தனை முறை இதனை செய்யலாம்? வாரத்தில் இரண்டு அலல்து மூன்று முறை இதனைச் செய்யலாம்.

தக்காளி

வேகமான நக வளர்ச்சிக்கு பயோடின் என்னும் முக்கிய பண்பு உதவுகிறது. தக்காளியில் பயோடின் அதிகம் உள்ளதை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். மேலும் தக்காளி இயற்கை சிகிச்சையில் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். கூடுதலாக, தக்காளியில் வைடமின் ஏ, சி போன்றவை இருப்பதால், நகங்கள் வேகமாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது. செய்முறை 1 1. தக்காளி சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். 2. நான்கு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். 3. இரண்டு பொருட்களையும் லேசாக சூடாக்கிக் கொள்ளவும். 4. அந்தக் கலவையில் உங்கள் நகங்களை 10 நிமிடங்கள் ஊற விடவும். செய்முறை 2 தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி துண்டை நகங்களில் சில நிமிடம் தொடர்ந்து தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றுவதால் உங்கள் நகங்கள் வேகமாகவும் வலிமையாகவும் வளரும்.

ஆரோக்கிய உணவுகள்

மேலே கூறிய வழிமுறைகள் அனைத்தும் நகங்களின் வளர்ச்சிக்கு வெளிப்புறத்தில் இருந்து உதவுகின்றன. நகங்களுக்கு புரதம் மற்றும் வைட்டமின்கள் தேவை. இதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஆகவே வலிமையான நக வளர்ச்சிக்கு சிறந்த வழி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் பலவிதமான உணவில் புரதம் மற்றும் வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால் நகங்கள் வேகமாக வளர முடியும். மேலும் அவை வலிமையாகவும் இருக்க முடியும். தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு ஒரே விதமான உணவு தேவைப்படுகிறது.

ஏன் வளர்வதில்லை

சிலருக்கு நமக்கு மட்டும் ஏன் நகங்கள் சரியாக வளர்வதில்லை என்ற கேள்வி மனதுக்குள் இருக்கும். நகங்கள் வளராமல் இருக்க சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கலாம். உங்கள் நகங்களை சரியாக பராமரிப்பதன் மூலம், சில எளிய தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம் மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதன் மூலம், மற்றும் சில பழக்கங்களை மாற்றுவதன் மூலம் உங்கள் நகங்கள் வலிமையாகவும் வேகமாகவும் வளர முடியும். உங்கள் நகங்களின் வளர்ச்சி தடைபடுவதற்கும் நகங்கள் பலவீனமாவதற்கும் கீழே குறிப்பிட்டுள்ள சில காரணங்கள் இருக்கலாம்.

நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்தவும்

தொடர்ந்து நகம் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. நகம் கடித்துக் கொண்டே இருப்பதால், நகங்களின் ஆழத்தில் சேதம் உண்டாவதால் நீளமாகவும், வேகமாகவும் நகம் வளர முடியாத நிலை ஏற்படுகிறது.

சரியான ரிமூவர் பயன்படுத்துங்கள்

நகங்களில் உள்ள பாலிஷை போக்க ஜெல் பயன்படுத்தும்போது அதிக அசிடோன் உள்ளவற்றை பயன்படுத்துவதால் நகம் உடைய நேரலாம்.

தவறான முறையில் நகத்தை தேய்ப்பது

நகத்தை சீராக வளர்ப்பதற்காக சிலர் நகங்களை தேய்த்து விடுவார்கள். அப்படி செய்வதால் சில நேரம் உங்கள் நகங்கள் சேதமடையலாம். கடினமாக நகங்களை தேய்ப்பதால் அவை பலம் இழந்து உடையக் கூடும். நகங்களை வலிமையாக வைத்துக் கொள்ள தேவையான தீர்வுகளை முயற்சிப்பதால் நகங்கள் வலிமையுடன் வேகமாகவும் நீளமாகவும் வளரக் கூடும். நிரந்தரமாக உங்களுக்கு நீளமான நகம் தேவை என்றால் உடனடியாக இந்த குறிப்புகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். இவற்றில் பல குறிப்புகள் குறுகிய காலத்தில் வேகமான நக வளர்ச்சியை உண்டாக்கும். ஆனால் இவற்றைப் பின்பற்றுவதில் நிதானம் மிக அவசியம். மேலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

இதோ உங்களுக்காக எளிய முறைகளில் வீட்டிலேயெ இருந்து சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி

sangika

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika

சிறு முயற்சி.,கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! பெரிய ஆரோக்கியம்..!!

nathan

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் பருக்களினால் ஏற்படக்கூடிய தழும்பகளை குணமாக்கும் இயற்கை வைத்தியம்.

nathan

சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan