28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pen
கூந்தல் பராமரிப்பு

பேன் தொல்லையை போக்க உங்களுக்கான தீர்வு!…

பெண்கள், குழந்தைகள் தலையில் பேன் தொல்லையால் அதிகம் அவதிப்படுவார்கள்.தலைமுடியை சரியாக பராமரிக்காத பட்சத்தில் பேன் பல்கிப்பெருகும், ஒரேநேரத்தில் பல முட்டைகளையிட்டு வளரும்.

இதற்கான தீர்வுகள் இதோ,

10 பூண்டுகளை தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள், இத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுழுவதும் தேய்த்து அரைமணிநேரத்தில் கழித்து குளிக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும், இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ளவும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

pen

உப்பு மற்றும் வினிகரை கலந்து தலைமுழுவதும் தடவவும், ஷவர் கேப் கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் தலையை மூடிக்கொண்டு ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து வந்தால் பலன் கிடைக்கப்பெறும்.

வேப்பிலையை அரைத்து தலைக்கு ஹேர்பேக்காக போட்டு, அரை மணிநேரம் கழித்து குளித்தால் பலனை பெறலாம்.

இதேபோன்று வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதனுடன் தேங்காய்பால் கலந்து ஹேர்பேக் போட்டாலும் பேன் ஒழியும், அத்துடன் தலைமுடியும் நீளமாக வளரும்.

Related posts

வீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி?

nathan

கூந்தல் உதிர்தலை தடுக்க‍ இதோ ஒரு அருமையான ஆலோசனை…

sangika

இது தலையை சுத்தம் செய்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது….

sangika

தலை முடியின் பராமரிப்புகள்

nathan

முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள்!…

sangika

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan

கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…

sangika

தலைமுடி பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika