யாருக்கு தான் முடி கொட்டுற பிரச்சினை இல்லை. முடி உதிர்வதால் மன உளைச்சல் ஒரு பக்கம், உடல் நல குறைபாடு ஒரு பக்கம், இப்படி எல்லா பக்கத்திலும் வேதனையே நமக்கு கிடைக்கிறது. பல நிறுவனங்கள் இதை மிக பெரிய அளவில் ஒரு வியாபாரமாகவே மாற்றி விட்டனர். வழுக்கைக்கு ஒரு மருந்து, முடி உதிர்வுக்கு ஒரு மருந்து, வெள்ளை முடிக்கு ஒரு மருந்து என பல வித மருந்துகளை காட்டி மக்களை ஏமாற்றியும் வருகின்றனர்.
இப்படிப்பட்ட மோசமான பிரச்சினையில் இருந்து விடுபட வழியே இல்லையா என்று கேட்டால், அதற்கு நம் முன்னோர்களின் வழி உள்ளது என்பதே பதில். அதுவும் கொத்தமல்லி இலையை வைத்தே நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற முடியும் என தற்போதைய ஆய்வுகளும் கூறுகின்றன. இது எப்படி சாத்தியம் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லி கொழுந்தே!
சமையலில் வாசனைக்காகவும், செரிமானத்திற்காகவும் நாம் சேர்க்கும் முக்கிய உணவு பொருள் தான் கொத்தமல்லி. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த கொத்தமல்லியில் உள்ளது. உடல் நலத்திற்கு எப்படி இது உதவுகிறதோ அதே போன்று முடியின் ஆரோக்கியத்திற்கும் கொத்தமல்லி சிறப்பாக பயன்படுகிறது.
கொத்தமல்லி எண்ணெய்
இழந்த இடத்தில் முடி வளர கொத்தமல்லி எண்ணெய்யும் சிறந்த மருந்தாக இருக்கும். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்… கொத்தமல்லி 1 கைப்பிடி ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும். அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அதன்பின் தலைக்கு குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.
கொத்தமல்லி வைத்தியம்!
கொத்தமல்லி வைத்தியம் இன்றோ நேற்றோ வந்தது கிடையாது. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த முறையை தான் வழுக்கையில் முடி வளர கடைப்பிடித்து வந்தனர். இதற்கு தேவையானவை… கொத்தமல்லி 1 கைப்பிடி தண்ணீர் அரை கப்
தயாரிப்பு முறை
முதலில் கொத்தமல்லியை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் சிறிது நீர் சேர்த்து கலந்து கொண்டு மீண்டும் அரைக்கவும். பிறகு இதனை முடியின் வேர் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்.
4 முதல் 6 வாரங்கள்… தேவைக்கு சிகைக்காய் அல்லது ஷாம்பூவை சிறிது பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் வழுக்கை இருந்த இடத்தில் முடி வளர்வதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். உங்களின் முழுமையான முடி வளர்ச்சிக்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம்.
கொத்தமல்லி விதை
3 ஸ்பூன் கொத்தமல்லியை விதைகளை எடுத்து பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பின் அவற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும். அத்துடன் முடி உதிர்வுக்கு நிற்கும்.
கொத்தமல்லி நீர்
நீரை கொதிக்க விட்டு அதில் கொத்தமல்லியை சேர்த்து 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். அதன் பின் இந்த நீரை வடிகட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு இதனை முடியின் அடிவேரில் தடவி மசாஜ் கொடுக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி விரைவிலே வளரும்.