26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
pimple1
முகப்பருசரும பராமரிப்பு

முகப்பருக்களை தடுக்க, குணப்படுத்த என்னென்னவோ செய்தாலும் தீர்வு இல்லையா?

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட கூடும். அவற்றை நம்மால் தடுக்க முடிகிறதா என்பதே தற்போதைய கேள்வி. பலவித நோய்கள் வந்தாலும் அவற்றை நாம் எந்த அளவுக்கு தடுக்கிறோம், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறோம் என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும். உடலில் எல்லாவித பிரச்சினைகளையும் நம்மால் தீர்க்க முடிவதில்லை.

ஆனால், முகத்தில் ஏற்பட கூடிய முக்கால் வாசி பிரச்சினைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சி போன்றவற்றை சொல்லலாம். முக்கியமாக பருக்களினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

முகப்பருக்களை தடுக்க, குணப்படுத்த என்னென்னவோ செய்தாலும் தீர்வு இல்லையா? இனி இதை நினைத்து கவலை படாதீர்கள்.

இதற்கு சிறப்பான வழி உள்ளது. அதுவும் ஒரே ஒரு பழத்தை உங்கள் வீட்டில் வைத்திருந்தாலே இதற்கு முற்றுப்புள்ளி தந்து விடலாம்.

pimple1

என்ன பழம்?

பல்வேறு பழங்கள் இருந்தாலும் முக பிரச்சினைகளை தடுப்பதற்கு ஒரு சில பழங்கள் தான் உள்ளன.

அதில் குறிப்பிட்டு சொல்ல போனால் திராட்சையை கூறலாம். இது மிகவும் புதுமையாக தான் இருக்கும். ஆனால், இது தான் உண்மை.

வெறும் திராட்சையை கொண்டே முகத்தில் இருக்க கூடிய பல பிரச்சினைகளை தீர்த்து விடலாம்.

ஆரோக்கியம் நிறைந்தவை

திராட்சை சீசன் ஆரம்பித்து விட்டதற்கு ஏற்ப, இதை நம்மால் எளிதில் முகப்பருக்களுக்கு பயன்படுத்த இயலும்.

இதை விட முக்கியம் இதன் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் தான். வைட்டமின் சி, மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், வைட்டமின் டி, ஜின்க், இரும்புசத்து ஆகியவை இதில் அதிக அளவில் உள்ளது.

குறிப்பு #1

இந்த குறிப்பு எண்ணெய் பசை சருமம் இருப்போருக்கு ஏற்றதாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள்…

திராட்சை 5

முல்தானி மட்டி 1 ஸ்பூன்

பன்னீர் அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் திராட்சையை அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் முல்தானி மெட்டி மட்டி மற்றும் பன்னீர் சேர்த்து முகத்தில் பூசவும்.

20 நிமிடத்திற்கு பின் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பருக்கள் மறைந்து போகும்.

குறிப்பு #2

வறட்சியான சருமம் உள்ளோருக்கு தான் இந்த குறிப்பு. இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் பருக்கள் உடனே போய் விடும்.

இதற்கு தேவையானவை…

கருப்பு திராட்சை 5

தேன் 2 ஸ்பூன்

பன்னீர் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

திரட்சையை நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.

அதன் பின் 15 நிமிடம் சென்று முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பு முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வறட்சியை போக்கி விடும். மறக்காமல் தொடர்ந்து இதை செய்து வந்தால் பலன் அதிகம்.

குறிப்பு #3

சாதாரண வகை சருமம் கொண்டோருக்கு, வெறும் திராட்சையை மட்டும் அரைத்து கொண்டு அதனை பருக்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம்.

இதனால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, இறந்த செல்களும் வெளியேறி விடும். அத்துடன் சருமம் நீண்ட காலம் இளமையாக இருக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

nathan

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?

nathan

இந்த வயதிலும் எப்படி…. என கேட்கும் பெண்களுக்காக ஜொலிக்கும் நயன்தாரா!… யூட்டி டிப்ஸ்கள் இதோ..

nathan

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

nathan

கழுத்து கருமை நிறம் மறைய

nathan

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

nathan

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்!

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

அழகு வேண்டுமா? ஆரோக்கியம்…

nathan