26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
hair grow
கூந்தல் பராமரிப்பு

இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வு!…

முடி உதிர்வு, அடர்த்தி குறைவு, வழுக்கை, நரை முடி, இப்படி முடியில் மட்டுமே எக்கசக்க பிரச்சினைகள் இருக்கிறது. முடியில் ஏற்பட கூடிய இந்த பிரச்சினைக்கு நாம் தான் முதல் காரணமாக உள்ளோம். முடியை சரியாக பராமரிக்காமல் இருத்தல், தேவையற்ற உணவுகளை சாப்பிடுதல், அளவுக்கு அதிகமான வேதி பொருட்களை முடியில் பயன்படுத்துதல் போன்றவை தான் முடியில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளுக்கும் காரணம்.

இதை சரி செய்ய ஏதேதோ வழிகளை தேடும் நாம் இயற்கையில் உள்ள வழிகளை மறந்து விடுகின்றோம். இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை வழி விடலாம்.

அதுவும் இந்த கருப்பு எண்ணெயை வைத்து முடியின் அனைத்து பிரச்சினைக்கு தீர்வை கண்டு விடலாம். இதை பற்றி இனி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

hair grow

கருப்பு எண்ணெய்யா?

இது வரை பலரும் இந்த வகை கருப்பு எண்ணெயை கேள்வி பட்டிருக்க மாட்டீர்கள். இது வெறும் கருஞ்சீரகத்தில் இருந்து தயாரித்த எண்ணெய் தான்.

இதை வைத்து நம்மால் எல்லாவித முடி பிரச்சினைகள் மற்றும் முக பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வந்து விடலாம். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான் இதன் மகிமைக்கு காரணம்.

வழுக்கைக்கு

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க இந்த குறிப்பை செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் ஆலிவ் எண்ணெய்யை கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு 2முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் வேகமாக முடி வளரும்.

முடி வளர்ச்சிக்கு

முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை… தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் கருஞ்ஜீரக எண்ணெய் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் மேற்சொன்ன எல்லா எண்ணெய்களையும் ஒன்றன் பின் ஒன்றான நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை இறுதியில் கலந்து முடியின் வேர்களில் தடவவும்.

20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி சட்டென வளரும்.

பருக்களுக்கு

முகம் முழுக்க பருக்களினால் மூடப்பட்டிருந்தால் அதை சரி செய்ய எளிய வழி உள்ளது. பருக்கள் மற்றும் எரிச்சல் கொண்ட இடங்களில் இந்த கருஞ்சீரக எண்ணெயை தடவி வந்தால் மிக சீக்கிரத்திலே பருக்கள் மறைந்து போகும்.

இளமையை பெற

நீண்ட காலம் இளமையாக இருக்க சிறந்த வழிகளில் ஒன்று கருஞ்சீரக எண்ணெய் தான். இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்து கொள்ளும். மேலும், சருமத்தில் எந்த பிரச்சினைகளும் உண்டாகாது.

Related posts

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும்.

nathan

தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? இதை முயன்று பாருங்கள்

sangika

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….சூப்பர் டிப்ஸ்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்

nathan

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது

sangika

கொலாஜன் ஹேர் மாஸ்க்! முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரொக்கியமாக இருக்கும்.

nathan

முடி வளர சித்த மருத்துவம்

nathan