23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
aamanakku1
அழகு குறிப்புகள்

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

இளமையை இழக்க கூடாது என்கிற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. ஒரே ஒரு வெள்ளை முடி வந்தாலே ஏதோ 60 வயதை கடந்தது போல பலர் வருந்துகின்றனர். இதை வைத்தே இளமை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் கண்டறிய இயலும். இளமையாகவே இருக்க பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள்.

சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள், சிலர் உடற்பயிற்சிகளை செய்வார்கள், சிலர் சத்தான உணவுகளை எடுத்து கொள்வார்கள்…இப்படி எண்ணற்ற வழிகளை பின்பற்றினாலும் இவற்றில் முக்கால் வாசி வழிமுறைகள் ஒர்க் அவுட் ஆவதில்லை.

நீண்ட காலம் இளமையாக இருக்க முதலில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க வேண்டும். அதன் பின் உங்களின் இளமை உங்கள் கையில் தான். இதை நிறைவேற்ற ஒரே ஒரு எண்ணெய் போதும்.

இந்த எண்ணெய்யை வைத்தே நம்மால் இளமையை பெற்று விட முடியும். அது என்ன எண்ணெய் என்பதையும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

aamanakku1

ஆமணக்கு!

பலவித எண்ணெய்கள் இருந்தாலும் இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக தற்போது உள்ளது. இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் இதில் நிரம்பி உள்ளது. அத்துடன் உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கும் இது தீர்வை தர கூடும். இந்த எண்ணெய்யை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.

குறிப்பு #1

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

குறிப்பு #2

உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும். அதற்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

குறிப்பு #3

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

குறிப்பு #4

1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

குறிப்பு #5 1

ஸ்பூன் மஞ்சளை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி சிறப்பான முறையில் மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு உங்களின் முகத்தை பொலிவாக்கத்துவதுடன், இளமையாகவும் வைத்து கொள்ளும்.

குறிப்பு #6

முகசுருக்கங்களை போக்க 1 ஸ்பூன் தேனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி வரலாம். அரை மணி நேரத்திற்கு பின் சாதாரண நீரில் முகத்தை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முகம் இளமையாக இருக்கும்.

குறிப்பு #7

1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு பஞ்சை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். மேற்சொன்ன குறிப்புகள் அனைத்துமே முக அழகை பொலிவாக்கி, இளமையாக வைத்து கொள்ளும்.

Related posts

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

வெளிவந்த தகவல் ! நான் ஆபாச படத்தில் நடிக்க ஷில்ப ஷெட்டியின் கணவர் தான் காரணம்!

nathan

சரும சுருக்கத்தைப் போக்கும் விளக்கெண்ணெ!!!

nathan

ஆலிவ் எண்ணெய் தோல் மாய்ஸ்சுரைசர் செய்ய 4 எளிய வழிகள்,beauty tips at tamil

nathan

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் அசீமின் மனைவியை பார்த்து இருக்கீங்களா …

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் 40 நாள் செவ்வாழையுடன், தேன் கலந்து சாப்பிடுங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சீன பெண்களை போல அழகில் மின்ன வேண்டுமா? இந்த ஒரு உணவு பொருள் போதும்….!

nathan