அழகு குறிப்புகள்

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் நல்லது.அவற்றில் ஒன்று தான் நம் வீட்டில் இருக்கும் கேரட். கேரட்டை பயன்படுத்தி நமது முகத்தை பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் சிறந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் உகந்தது. கேரட் பேஸ் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.2 கேரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கேரட்டுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம். மேலும் இந்த கேரட் பேஸ் பேக் பருக்களை போக்கும் தன்மை கொண்டது.

Related posts

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

nathan

உக்ரைன் பொதுமக்களிடம் தனியாக வந்து சிக்கிய ரஷ்ய வீரருக்கு நேர்ந்த நிலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

முகம் பளபளக்க சீரகத் தண்ணீர்!…

nathan

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

பித்த நரையை போக்கும் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை எண்ணெய்

nathan

பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம் -தெரிந்துகொள்வோமா?

nathan