27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
New fashion for girls
ஃபேஷன்அலங்காரம்

பெண் குழந்தைகளுக்கு புதிய பெஸன்!

பெண் குழந்தைகளுக்கு டிரஸ் பண்ண பெரிய போராட்டம் நடக்கும். அம்மாவும், மகளும் ஒரே கலர் டிரஸ் என்று கூட சொல்லி, அவர்களை நம் வழிக்கு கொண்டு வர, டிரஸ் செலக்ட் செய்து வாங்கினால், அதை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் டிரஸ்சை அணிந்து கொள்வர். குழந்தைகளுக்கு நாம் எது நல்லது, எது கெட்டது என்று எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வர்.

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

New fashion for girls

திருமண விழாக்களில்:

திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

ரிசப்ஷனுக்கு :

மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

பர்த் டே பார்ட்டி:

அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

Related posts

முகங்களிற்கு ஏற்ற பொட்டு

nathan

பலவகை ஸ்டைல்களில் சேலை உடுத்துங்கள்

nathan

இது புதுசு மிரட்டும் பாகுபலி கொலுசு…

nathan

பொருத்தமான சட்டையை தெரிவுசெய்வது எப்படி?

nathan

முகம் ஜொலிக்கணுமா?

nathan

மருதாணி … மருதாணி…

nathan

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக்கள்…

nathan

உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்

nathan

சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் ஆடைகள்: baby boy christmas outfit

nathan