25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
six pack
அழகு குறிப்புகள்ஆண்களுக்குஎடை குறைய

வயிறை தட்டையாக வைத்திருக்க இத செய்யுங்கள்!….

கார்போஹைட்ரேட் அளவு

பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள், ஆனால் அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. ஏனெனில் இது தசைகளின் வலிமையை கிளைகோஜனின் சுரப்பை தடுக்கும். தொடர்ந்து இயங்கும் உங்களின் தசைகள் சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை, அவை கார்போஹைரேட்டிலிருந்து கிடைக்கிறது.

2500 கலோரிகள் டயட்டை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு அதன்மூலம் 310கிராம் கரோபோஹைட்ரேட் கிடைக்கும்.

அதிக புரோட்டின்

உடல் வலிமைக்கு அடிப்படையான சத்து என்றால் அது புரோட்டின்தான். உங்கள் உணவில் அதிகளவு புரோட்டினை சேர்த்து கொள்வது உங்கள் தசைகளை வலிமையாக்குவதுடன் கொழுப்பை எரிக்கவும் உதவும்.

உங்கள் தசைளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

six pack

ஆரோக்கியமான கொழுப்புகள்

உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது.

இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும்.

வயிறை தட்டையாக வைத்திருக்கவும், சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி சாப்பிட வேண்டும்

பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுபவது எடை குறிப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது.

கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.

டயட்டில் கவனம் செலுத்த வேண்டும்

அதிக கொழுப்புகளை எரித்து தசைகளை வலிமைப்படுத்த உங்கள் டயட் மற்றும் சாப்பிடும் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் உணவை கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகள் கொண்டு சரியான அளவில் நிரப்பவும். இது உங்கள் உடலில் அதிக எடை சேர்வதை தடுக்கும்.

உடலுக்கான எரிபொருள்

உடற்பயிற்சிக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி நீர்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி சாப்பிட்டு முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

சாப்பிடும் பழக்கம்

உங்கள் நாளை எப்பொழுதும் அதிகமான உணவுடன் தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும்.

நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

Related posts

எடையை குறைக்க எட்டே வழிகள்,

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

அம்மாடியோவ் என்ன இது ? நடிகர் நடிகைகளுடன் ஃபுல் போதையில் தலைக்கேறிய திரிஷா!

nathan

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

nathan

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

nathan