27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
FACE4
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

ஆரேஞ்சு பழங்கள் அன்ரிஒக்ஸிடன் உடன் சேர்த்தே பொதி செய்யப்படுகிறது. அத்துடன் இவற்றில் முக்கியமான விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் அடங்கியுள்ளது.
அது மட்டுமின்றி, ஆரேஞ்சு பழங்கள் முகத்தை அழகாகவும் இளமையாகவும் மாற்ற பேக் மற்றும் மாஸ்க் வடிவில் பயன்படுத்தபடுகிறது. பொதுவாக உள்ள தோல் பிரச்சனைகளாக தோல்பழுப்பு, தோல் கறைகள், உலர்ந்த தோல் மற்றும் பல…..

கோடைக்காலத்தில் இவ்வாறான தோல் பிரச்சனைகளுக்கு உள்ள ஒரு தீர்வு ஆரேஞ்சு பழங்களை பயன்படுத்தல் ஆகும். இதற்கு காரணம் கோடைக் காலத்தில் சித்ரிக்கமிலம் அடங்கியுள்ள பொதுவாக இலகுவாக கிடைக்க கூடிய பழங்கள் என்பதால் ஆகும்.

இப்போது ஆரேஞ்சு பழங்களை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பொலிவாக்கலாம் என்று பார்ப்போமா???

படிமுறை 01: முகத்தை சுத்தமாககழுவுதல்

முதலும் அடிப்படையானதுமான படிமுறை இதுவாகும். இதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் மேலதிக எண்ணெய் தன்மையையும் நீக்கப்பட்டு முகத்தை சுத்தபடுத்தபடுகின்றது.

FACE4

உள்ளடக்கங்கள்

1 மேசைக் கரண்டி ஆரேஞ்சு பொடி + 2-3 தேக்கரண்டி பால்

எவ்வாறு பயன்படுத்துவது??

1 மேசைக் கரண்டி ஆரேஞ்சு பொடி உடன் 2-3 தேக்கரண்டி பாலை சேர்த்து கலவையை தயாரித்தல். அதனை முகத்தில் பூசிக் கொண்டு 2 நிமிடங்கள் வட்டமாக அசைத்து மசாஜ் செய்தல். அதன் பின்சாதாரணநீரினால்முகத்தைகழுவுதல்.

படிமுறை 02 :முகத்தை தேய்த்து கழுவுதல்

இப் படிமுறையானது இறந்த தோல் கலங்களை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்தமான முகத்தில் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

உள்ளடக்கங்கள்

2 மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் + 1 மேசைக் கரண்டி தானிய வகை சீனி + சில துளிகள் அத்தியாவசிய ஆரேஞ்சு எண்ணெய்.

எவ்வாறு பயன்படுத்துவது??

மேற்குறிப்பிட்ட உள்ளடக்கங்களை ஒரு கோப்பையினுள் இட்டு கலவை ஒன்றை தயாரித்தல். அதனை முகத்தில் வட்ட வடிவில் பூசி கொண்டு 5-6 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். பின்னர், முகத்தை சாதரண நீரினால் கழுவுதல்.

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

படிமுறை 03 : முக அழகியல் மூடிகளை இடுதல்

இப் படிமுறை முக அழகியலில் முக்கியமான படிமுறை ஆகும். இதனால் தோலிற்கு ஈரப்பதன் கிடைப்பதனால் முகத் தோற்றம் பொலிவாகின்றது.
இங்கே ஆரேஞ்சு உடன் தொடர்பான முக அழகியல் மூடிகளை பார்ப்போமா!!!

வாழைப்பழ மற்றும் ஆரேஞ்சு பழ முக அழகியல் மூடி
இது முகத்தை ஈரலிப்பாக்குவதுடன் முகப்பரு, முகத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்.

உள்ளடக்கங்கள்

1ஆரேஞ்சு + 1 வாழைப்பழம்

எவ்வாறு பயன்படுத்துவது??

ஒரு கோப்பையினுள் இரு பழங்களையும் இட்டு நன்றாக நசித்து கலவை ஒன்றை தயாரித்தல். இந்த தடிப்பான கலவையை முகத்தில் பூசி 15-20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் உலர்ந்த பகுதிகளை நன்கு நீக்கிய பின் சாதாரண நீரினால் முகத்தை கழுவுதல் வேண்டும்.

ஆரேஞ்சு மற்றும் ஒட்ஸ் முக அழகியல் மூடி

உள்ளடக்கங்கள்

2 மேசைக் கரண்டி ஆரேஞ்சு பொடி + 1 மேசைக் கரண்டி தேன் + 1மேசைக் கரண்டி ஓட்ஸ் பொடி

எவ்வாறு பயன்படுத்துவது??

மேற்குறிப்பிட்ட எல்லா உள்ளடக்கங்களையும் சேர்த்து தடிப்பான பசை கலவையாக தயாரித்தல். அதனை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் மென்மையான தோலை பெற முடியும்.

இந்த முகப் பேக் உலர் தோலை உடையவர்களுக்கு பொருத்தமானது.
மஞ்சள் மற்றும் ஆரேஞ்சு முக பேக்

உள்ளடக்கங்கள்

1 மேசைக் கரண்டி தோலுரித்த ஆரேஞ்சு பழப்பொடி + சிட்டிகை அளவு மஞ்சள் தூள் + 1மேசைக் கரண்டி ரோஸ் நீர்

எவ்வாறு பயன்படுத்துவது??

ஒரு கோப்பையினுள் 1மேசைக்கரண்டி தோலுரித்த ஆரேஞ்சு பழப் பொடி மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் என்பவற்றை சேர்த்தல்.

அதனுள் சிறிதளவு ரோஸ் நீரை சேர்த்து பசை கலவையை தயாரித்தல். இதனை முகத்திற்கும் கழுத்து பகுதிக்கும் பூசிக் கொள்ளல்.

அதனை 10-15 நிமிடங்கள் வரை உலர விடுதல். அதற்கு பின் வட்ட வடிவில் தேய்த்து கொண்டு குளிர் நீரினால் கழுவ வேண்டும்.

கற்றாளை மற்றும் ஆரேஞ்சு முக பேக்

இந்த முகப்பேக் தோல் சிவந்து போதல் மற்றும் சூரிய கதிர்களினால் ஏற்படும் எரிச்சல் என்பவற்றை குறைப்பதோடு தோலின் நிறத்தையும் அதன் தன்மையையும் மேம்படுத்த உதவும்.

உள்ளடக்கங்கள்

2 மேசைக் கரண்டி தோலுரித்த ஆரேஞ்சு பழப்பொடி 2 மேசைக் கரண்டி கற்றாளை ஜெல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு

எவ்வாறு பயன்படுத்துவது??

புதிய கற்றாளை இலையை எடுத்து நன்றாக பிழிந்து அதிலுள்ள ஜெல்லை வேறாக பிரித்து எடுத்தல். புதிதான கற்றாளை இலையை பெற முடியாத பட்சத்தில் சந்தையில் இருந்து ஜெல்ஐ வாங்கலாம்.

அதனுள் 2 மேசைக் கரண்டி தோலுரித்த ஆரேஞ்சு பழப் பொடி, சிறிதளவு எலுமிச்சைச் சாறு என்பவற்றை சேர்த்து உருவாக்கிய கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் குளிர் நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறான எளிதான பேக் முறையை 1-2 மாத கால வரையில் வாரத்தில் ஒரு தடவை என பயன்படுத்தல் சிறந்தது. .

Related posts

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

நீங்களே பாருங்க.! விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மார்ட்ன் உடையில் சமந்தா…

nathan

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள், இயற்கையான முறையில் தங்களுடைய சரும அழகை அதிகரிக்க முடியும்..

nathan

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

nathan

முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்க…

nathan

ஃபேஸ் மாஸ்க் போடும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

படிக்கத் தவறாதீர்கள்! தினமும் லிப்ஸ்டிக் போடுவது நல்லதா?

nathan

இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan