26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
viniger
அலங்காரம்அறுசுவைஅழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்புகூந்தல் பராமரிப்பு

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

வினிகர் சமையலில் , ஊறுகா சேர்ப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால், வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா? பார்போம் வாருங்கள்.

-ஒரு டப் மிதமான சூட்டில் வெந்நீர் ஊற்றி, ஒரு மூடி வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் லிஸ்டெரின் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் கால் பாதங்களை விட்டு, 10நிமிடம் ஊரவிடுங்கள். பின் பாருங்கள் பாதங்களின் மிருதுவான தோற்றத்தை. பூஞ்சை தொற்றை நீக்கும்.

viniger

-தலைக் குளித்தவுடன் கூந்தலுக்கு கடைசி அலசலுக்கு வினிகர் கலந்த நீரை உபயோகித்தால் கூந்தல் மென்மையாக , பட்டுப்போல் இருக்கும்.

-அலங்கார ஜாடியில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க ஒரு ஸ்பூன் வினிகரை ஜாடியில் உள்ள தண்ணீரில் ஊற்றி வைக்கலாம்.

-பித்தளை, செம்பு போன்ற உலோக பொருள்களை சுத்தம் செய்வதற்கு முன், நீரில் வினிகர் கலந்து அதில் ஊரவிட்டால் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இரும்பில் துருவைக்கூடக் கரைக்கும் சக்தி வினிகருக்கு உண்டு.

-முழு முட்டை நீரில் வேக வைக்கும்போது, உடையாமல் இருக்க நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை ஓடு உடைந்தாலும் உள்ளிருப்பது வெளியில் வராது.

-சிக்கனில் வினிகர் தெளித்து பிரட்டி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். அல்லது பிரியாணிக்கு சிக்கன் வேக வைக்க வினிகர் சேர்த்துக்கொண்டால், மிருதுவாக வெந்துவிடும். மாமிச வாடையும் அடிக்காது.

-சமையலில் காரத்தை கட்டுபடுத்த வினிகரை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

-சமயல் பாத்திரம் அடி கருகிவிட்டால் வினிகர் ஊற்றி ஊரவிட்டு கழுவுங்கள். பாத்திரம் புதிது போன்று ஆகும்.

-ஆடைகளில் கறைப் பட்டால், வினிகர் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து துவைத்தால் கரை நீங்கும்.

-புதிய பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊரவிட்டால், ஸ்டிக்கர் பசையில்லாமல் பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும்.

Related posts

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்…..

sangika

நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது…..

sangika

சூப்பரான கை வைத்தியம்!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா? நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

வெந்நீரில் குளிக்க கூடாது! இது முற்றிலும் தவறு!..

sangika

பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால் இத பயன்படுத்துங்க!…

sangika

முகத்தை புத்துணர்ச்சியாக்கும் அழகு குறிப்புகள்…!

nathan