25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
hair3
கூந்தல் பராமரிப்பு

முடியை பொலிவாக வைக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலை முடியை சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக உள்ளது. சிலருக்கு இது உடல்நல கோளாராகவும் இருக்கிறது. முடியைவைத்து ஒரு புறம் படுஜோராக வியாபாரம் நடந்து வருகிறது. “வழுக்கை பிரச்சினையா- இந்த எண்ணெய்யை தடவுங்கள்..! முடி கொட்டுதா- இந்த லேகியம் சாப்பிடுங்கள்..!” இப்படி பலவித வியாபார அம்புகள் நம்மை நோக்கி நாளுக்கு நாள் அதிக அளவிலே வருகின்றன.

இதில் ஒன்று தான் முடியில் வறட்சி உண்டாகுதல். தலை முடியில் இது போன்ற நிலையில் இருந்தால் முடி முழுவதுமாக கொட்ட தொடங்கி விடும். இதற்கு முடியில் ஈரப்பதம் குறைவாக இருப்பதே காரணம்.

முடிக்கு அதிக அளவில் ஈர்ப்பத்தை ஏற்படுத்தி, முடி கொட்டாமல் பார்த்து கொள்ள சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு #1

முடியை பொலிவாக வைக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு 1 முட்டையை நன்றாக அடித்து கொண்டு அதில் 3 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து தலைக்கு தடவவும். 40 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடியின் வறட்சி நீங்கி விடும்.

குறிப்பு #2

3 ஸ்பூன் கற்றாழை சாற்றுடன் 1 கப் தயிரை சேர்த்து நன்கு கலக்கி தலைக்கு தடவவும். அவ்வாறு தடவும் போது முடியை இரண்டாக பிரித்து தடவினால் நல்ல பலனை அடைய முடியும். 30 நிமிடம் சென்று தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்தால் வறட்சி நீங்கி முடி கொட்டுதல் நின்று விடும்.

hair3

குறிப்பு #3

3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 1 கப் தயிரை சேர்க்கவும். இதில் சிறிது பன்னீர் சேர்த்து நன்றாக கலக்கி தலைக்கு தடவி, 40 நிமிடம் கழித்து தலையை சிறிது சிகைக்காய் பயன்படுத்தி குளித்து வந்தால் எளிதில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

குறிப்பு #4

பழுத்த ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து கொண்டு அதனுடன் 1 கப் தயிர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின் இதை தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு மிக அற்புதமாக உங்கள் முடியிற்கு பயன்படும்.

குறிப்பு #5

இந்த நான்காவது குறிப்பு பலவிதங்களில் உங்களுக்கு உதவும். இதற்கு தேவையான சில பொருட்கள் இதோ… முட்டை 1 தயிர் 1 கப் ரோஸ்மெரி எண்ணெய் அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் முட்டையை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தயிர் மற்றும் ரோஸ்மெரி எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவவும். 30 நிமிடத்திற்கு பின் தலைக்கு குளிக்கவும்.

இதே போல வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

குறிப்பு #6

இந்த குறிப்பில் மிக முக்கிய பொருளே வெந்தயம் தான். இதில் உள்ள லெசித்தின் என்கிற அமிலம் தலை முடியை மிகவும் மென்மையானதாகவும், பொலிவானதாகவும் மாற்றும். இதற்கு தேவையானவை 1 கப் தயிர் அரை கப் வெந்தயம்

தயாரிப்பு முறை

ஒரு நாள் இரவு முழுக்க வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் இதனை தயிருடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின் இதை தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலையை அலசவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் வறட்சி நீங்கி பொலிவு பிறக்கும்.

 

Related posts

இளம் வயதிலே நரை முடியா..? இதை பார்க்கும் போதெல்லாம் வேதனையாக உள்ளதா..?…

sangika

உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய்…

nathan

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். hair fall control egg conditioner

nathan

முடி வளர்ச்சியை தூண்டும் பல பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் முக்கியமானதுதான் ஈஸ்ட்

nathan

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

கூந்தலைப் பராமரிக்க அருமையான வழிகள்!

nathan