25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dandurf
கூந்தல் பராமரிப்பு

பொடுகு தொல்லை நீங்க இதை செய்தாலே போதும்!…

பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும். கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.

வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.

dandurf

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.

காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.

Related posts

முடியின் வளர்ச்சியைத் தூண்டுட சீகைக்காய் பொடி!….

sangika

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கூந்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan

வழுக்கையில் முடி வளர கொத்தமல்லி வைத்தியம்!

sangika

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

nathan

உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா?..

sangika

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்

nathan

இளம் நரையை மறைக்கும் இயற்கை ஹேர் டை

nathan

மருதாணியின் மகத்துவங்கள்,தலைமுடி

nathan

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா

nathan