34 C
Chennai
Wednesday, Jul 2, 2025
beauty2
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

beauty2

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும். சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

Related posts

உங்க பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?

nathan

உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்! அதிக செலவு இல்லை…

nathan

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சென்ஸிடிவ் சருமத்தினை அழகாக்கும் வாழைப்பழ ஸ்க்ரப்

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாம்பழ ஃபேஸ் பேக்

nathan

தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவரே தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சொல்கிறார்!…

nathan

முகத் தழும்புகளை நீக்க முத்தான 9 இயற்கை வழிகள்!!!

nathan