25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
east
கூந்தல் பராமரிப்பு

வேர்க்கால்கள் பலப்படுத்தப்பட்டு முடிஉதிர்வினை கட்டுப்படுத்த ஈஸ்ட்!…

ஈஸிட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வேர்க்கால்கள் பலப்படுத்தப்பட்டு முடிஉதிர்வினை கட்டுப்படுத்த முடியும்.

புதிய முடிகள் விரைவில் உருவாகும். தொடர்ந்து பயன்படுத்தினால் ஓரிரு வாரங்களில் முடியின் நீளம் அதிகரிப்பதை காணலாம்.

ஈஸ்ட் ஒரு நுண்ணுயிர். பிரட், பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுவகைகளை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

உணவு வகைகள் மட்டுமன்றி, சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஈஸ்ட் நல்ல பலன்களை தருகின்றது.

east

வழிமுறை 1:

தேவையானவை: முட்டையின் மஞ்சள் கரு – 2, ஈஸ்ட் – 1 ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும்.

20 – 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள்.

வழிமுறை 2:

ஈஸ்ட் – 1 டீஸ்பூன், கற்றாழை – 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன். மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.

இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியி அலச வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் நல்ல நீளமான கூந்தலை பெறலாம்.

Related posts

முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது.

nathan

வழுக்கையில் முடி வளர கொத்தமல்லி வைத்தியம்!

sangika

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

nathan

முடி கொட்டுவது இயல்பானதா?

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

நீளமான கூந்தலுக்கான அழகு குறிப்புகள்

nathan

கூந்தல் பராமரிப்புக்கு இயற்கை முறை பராமரிப்புக்கள்!….

sangika

பொடுகு தொல்லையா? இதோ சில டிப்ஸ்!

nathan