26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
chicken kuruma
அறுசுவைஅசைவ வகைகள்

சுவையான சிக்கன் குருமா!…

தேவையான பொருட்கள்

சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி – 3

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 6 பற்கள்

chicken kuruma
செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5 நிமிடம் வதக்கி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் குருமா தயார்.

Related posts

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

nathan

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

அதிரசம்

nathan

ஆட்டிறச்சி கறி

nathan

சுவையான கருவாடு பிரட்டல்… நாள் செல்ல செல்ல அதிகரிக்கும் சுவை!

nathan