23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
milaku
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி!…

ஒவ்வொரு உணவு பொருளுக்குள்ளும் பலவித பயன்கள் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம், மன நலம், முக ஆரோக்கியம் மற்றும் முடியின் ஆரோக்கியம் ஆகியஎண்ணற்ற வகையில் இவற்றின் பயன்கள் இருக்கும். ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் முகத்தில் இருக்க கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த கூடும்.

அந்த வகையில் நம் அஞ்சறை பெட்டியிலுள்ள சில பொருட்கள் பயன்படுகிறது. இவை முகத்தில் உள்ள பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள்ளே குணப்படுத்தி விடும். எப்படி இந்த உணவு பொருட்கள் இவ்வளவு மூலிகை தன்மை கொண்டுள்ளது என்பதையும்… எவ்வாறு நமது முக பிரச்சினைகளை தீர்ப்பது என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

milaku

பருக்களை போக்க…

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. அதுவும் நம் வீட்டு அஞ்சறை பெட்டி பொருளில் இருந்தே நாம் இதை செய்யலாம். இதற்கு தேவையானவை… யோகர்ட் 1 ஸ்பூன் கருப்பு மிளகு தூள்

செய்முறை :-

முதலில் மிளகு தூளை யோகர்டுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள் முழுவதையும் நீக்கி விடும்.

கண்ணின் பிரச்சினைக்கு

நாள் முழுக்க லேப்டாப்பிலே வேல செஞ்சு கண்ணுலா எரியுதா..? அதோடு சேர்த்து கண்ணு வீக்கமாவும் இருக்கா..? இனி இதற்கு சரியான தீர்வு கொத்தமல்லி விதைகள் தான். கொத்தமல்லியை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கண்ணில் விட்டு கொள்ளுங்கள். மேலும், சிறிது ஒத்தடமும் கொடுங்கள். இவ்வாறு செய்வதால் கண் எரிச்சல், கண் மங்கிய தன்மை குணமாகி விடும்.

முகம் மினுமினுக்க

முகம் பளபளவென மின்ன, ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை… மஞ்சள் 2 ஸ்பூன் தேன் 2 ஸ்பூன்

செய்முறை :-

மஞ்சளை தேனுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். மஞ்சளில் உள்ள அந்தோ ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பொலிவு தரும் தன்மை உங்களை பளபளவென மாற்றும். அத்துடன் தேன் உங்களின் முகத்தை வெண்மையாக ஆக்கும்.

ஜாதிக்காய் முறை…

முகம் என்றுமே பொலிவுடன் அழகாக இருக்க ஜாதிக்காய் குறிப்பு போதும். இதனை தயாரிக்க தேவையானவை… ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் பால் 1 ஸ்பூன் தேன் அரை ஸ்பூன்

செய்முறை :-

ஜாதிக்காய் பொடியுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 15 நிமிடம் சென்று வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்து எந்தவித பிரச்சினைகளையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

வழுக்கை பிரச்சினைக்கு

முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை விழுந்துள்ளதா..?இதற்காக ஏதேதோ செய்ய வேண்டாம். வெறும் பூண்டை வைத்தே நம்மால் எளிதாக இதற்கு தீர்வு தர முடியும். தேவையானவை… பூண்டு 3 பல் ஆலிவ் எண்ணெய் அரை கப்

செய்முறை :-

பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு ஒரு பாட்டிலுக்குள் போட்டு கொள்ளவும். அடுத்து பூண்டு மூழ்கும் வரை ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு 10 நாட்கள் ஊற வைத்து அதன்பின் தலைக்கு பயன்படுத்தலாம். அத்துடன் நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம்.

Related posts

குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்!

nathan

நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது…..

sangika

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பால் குளியல்

nathan

பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம். முகத்திற்கு அழகு தரும் பப்பாளி பழம்!

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

சருமம் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர அதிசயத்தை பாருங்கள்…

sangika

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

nathan

தெரிந்துகொள்வோமா? உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள்!!

nathan