பல வருடங்களாகவே, இந்தியர்கள் ஃபேர் அண்டு லவ்லி சருமம் தான் அழகு என்ற கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். மாநிறமுடைய பெண் வசீகரமான தோற்றத்துடன் இருந்தாலும் வெள்ளை தோல் இல்லாத காரணத்தால் அத்தனை வரவேற்பை பெற முடிந்ததில்லை.
இந்தியர்கள் வெள்ளை சருமம் முதல் மாநிற சருமம் வரை பல வகையான சரும நிறத்தை கொண்டுள்ளனர்.
ஆனால் அதில் வெளுப்பான சருமம் கொண்டவர்களே மற்றவர்களை விட அழகானவர்கள் என்ற எண்ணம் வெகு காலமாக இருந்து வந்தது.
ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருகிறது. இன்று பழுப்பு நிறமும் வெள்ளை சருமத்துக்கு இணையாக கருதப்படும் நிலை உருவாகிவிட்டது.
பாலிவுட்டிலும் ஃபேஷன் துறையிலும் தற்போது மாநிறத்து தேவதைகள் பெருமையுடன் தங்களது பழுப்பு நிறத்தை தாங்கி உலா வருகின்றனர்.
ஆனால் உங்களது நிறத்தை பற்றிய தன்னம்பிக்கை அது பொலிவுடன் திகழும் போது தான் அதிகரிக்கிறது. பிபாஷா பாசு, தீபிகா படுகோன் அல்லது லாரா தத்தா ஆகியோரை நினைத்து பாருங்கள்.
இந்த நடிகைகளும் மாடல்களும் மாசு மருவற்ற அவர்களது மாநிறத்தைனாலேயே நம்மை வசீகரிப்பது உண்மை தானே.
அவர்களது அந்த தோற்றத்தின் ரகசியம் என்னவென்று தெரியுமா? சில எளிமையான குறிப்புகளை பின்பற்றினாலே உங்களது சருமமும் அவர்களது சருமம் போலவே பொலிவுடன் மின்னும்.
அழகு என்பது நமது சருமத்தின் ஆழம் வரை மட்டுமேயல்ல
உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில், நீங்கள் அதற்கு உள்ளிருந்து போஷாக்களிக்க வேண்டும்.
அதற்கு போதிய அளவு நீர்சத்தினை சருமத்துக்கு அளிக்க வேண்டும் மற்றும் சத்துள்ள டயட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 6 முதல் 8 டம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேறிவிடும்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அடங்கிய மீன் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெறமுடியும்.
விட்டமின் சி அடங்கிய உணவுகள் பருக்களை எளிதில் குணமடைய செய்யும் மற்றும் நார்சத்து நிறைந்த காய்கறி உணவுகள் உங்களது செரிமான உறுப்புகளை சுறுசுறுப்படைய செய்து ஆரோக்கியமான சருமத்தை அளிக்கும்.
உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் முகம் ஊதியது போன்ற தோற்றம் ஏற்படும் என்பதையும் சர்க்கரை அதிகம் சேர்ப்பதால் முகம் பொலிவற்று காணப்படும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே பதப்படுத்தப்பட்டு பேக் செய்த உணவுகளை அறவே தவிர்ப்பது நலம்!
உடலுழைப்பை அதிகரிப்பீர்
நல்ல வொர்க் அவுட் செய்வதால் சருமம் மினுமினுப்படையும். சிறந்த கார்டியோ உடற்பயிற்சி, தினசரி ஜாகிங் அல்லது சாதாரண நடைப்பயிற்சி கூட இரத்த ஓட்டத்தை சீராக்கி பொலிவான சருமத்தை தரும்.
தினசரி இரவு 8 மணி நேர உறக்கம் அவசியம். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை முதலில் சருமத்தை பொலிவிழக்க செய்யும்.
எனவே யோகா பயிற்சி அல்லது தியானம் செய்வதன் மூலம் அந்த நரம்புகள் ரிலாக்ஸ் ஆகும்.
முகத்தை புத்துணர்ச்சியுடன் வையுங்கள்
உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. சருமத்துக்கும் போதிய கவனிப்பு அவசியம்.
அதற்கு உங்களது முகத்தை ஒரு மென்மையான சோப்பினால் இரவு கழுவி முகத்தில் படிந்துள்ள மாசு மற்றும் மேக்கப்பை நீக்க வேண்டும்.
மேலும் தரமான டோனர்கள், மாயிஸ்சரைசர்கள் மற்றும் சன் ஸ்கிரீன்ஸ் கொண்டு சருமத்தை பாதிப்புகளில் இருந்து காக்கலாம்.
செயற்கையான காஸ்மெட்டிக்குகளை நம்புவதை விட இயற்கை பொருட்களான சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமாதி தைலம் ஆகியவற்றை பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவது நிச்சயம்.
ஆலோ வேரா ஜெல் ஐ பயன்படுத்தினால் சருமம் கூடுதல் பளபளப்பை பெறும். ஆலோ வேரா அடங்கிய ஜெல் மாசுகளை எதிர்த்து செயல்பட்டு 9 டூ 5 வேலை பார்ப்பவர்களின் சருமத்தை தூசு மற்றும் கரைகளில் இருந்து பாதுகாக்கிறது.
உங்களது வாழ்க்கை முறையில் சில சிறிய மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் உங்களது சருமம் எந்த நிறந்தினை கொண்டிருந்தாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் மினுமினுப்பை வெளிக் கொண்டு வரலாம்!