29.2 C
Chennai
Saturday, Jul 5, 2025
mahendi
மெகந்திடிசைன்கை வேலைகள்மணப்பெண் அழகு குறிப்புகள்

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி!…

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி பலர், இவ்வாறு கையில் வைக்கும் மெஹந்தி எளிதில் போய்விடுவதால், வெறுத்து அதனை வைப்பதை தவிர்க்கின்றார்கள்.

எனவே இத்தகைய மெஹந்தியை நீண்ட நாட்கள் தக்க வைப்பதற்கு, ஒருசில ட்ரிக்ஸ் உள்ளன.

அவற்றை சரியாக பின்பற்றி, மருதாணியை வைத்தால், நிச்சயம் மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.

இப்போது, அந்த மெஹந்தி/மருதாணியானது நீண்ட நாட்கள் கைகளில் இருப்பதற்கு என்னவெல்லம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கைகளை நன்கு கழுவவும் மெஹந்தி வைக்கும் முன், கைகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அதிலும் டோனர் கொண்டு சுத்தம் செய்து மிகவும் சிறந்தது.

கெட்டியான மெஹந்தியைப் பயன்படுத்தவும் மெஹந்தி போடும் போது, நன்கு அடர்த்தியான கோடுகளைப் போடுவதால், அவை சருமத்தில் நன்கு ஊடுருவி, நீண்ட நாட்கள் இருக்கும்.

mahendi

மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், உடனே கழுவாமல், நீண்ட நேரம் வைத்திருந்தால், மெஹந்தியில் உள்ள நிறமானது சருமத்தில் நன்கு ஊடுருவி, நல்ல நிறத்துடன் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

மெஹந்தியை கைகளுக்குப் போட்ட பின்னர், எலுமிச்சை சாற்றில் சர்க்கரையைப் போட்டு சூடேற்றி, குளிர வைத்து, மெஹந்தியானது காய்ந்த பின்னர், அந்த கலவையை பஞ்சு கொண்டு கைகளில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்தால், மெஹந்தியானது இன்னும் நல்ல நிறத்துடன் பிடிக்கும்.

மருதாணி போட்ட பின்னர், சிறிது வெஜிடேபிள் ஆயிலை கைகளுக்கு தடவி ஊற வைத்து, பின் கழுவினாலும் நீண்ட நாட்கள் மெஹந்தியானது இருக்கும்.

முக்கியமாக மெஹந்தி போட்டப் பின்னர், 24 மணிநேரத்திற்கு கைகளுக்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது.

மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் மெஹந்தியானது நீண்ட நாட்கள் கைகளில் இருக்கும்.

Related posts

உடலில் மஹந்தி அலங்காரம்

nathan

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika

சுருள் படங்கள் செய்வோமா?

nathan

Bridesmaids Sarees : Simple Sarees

nathan

மருதானி போட எப்படி கற்றுக்கொள்வது?

nathan

தேன் மெழுகு மலர்க் கொடி

nathan

அழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)

nathan

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?

nathan

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

nathan