25.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
karuvalaijam1
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிட!…

கருவலையம் என்பது வெறும் சருமப் பிரச்னை என்று கடந்துவிட முடியாது. அது நம் உடல்நலக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னை. தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மனஅழுத்தம் , அலைச்சல் போன்ற காரணங்களால் கருவலையம் ஏற்படும். இருப்பினும் முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிடலாம். ஆனாலும் வாழ்க்கை முறையை மாற்றி உடல் ஆரோக்கியத்தாலும் கருவலையத்தை நீக்க வேண்டியது அவசியம்.

உருளைக்கிழங்கு சாறு: இது மிகவும் எளிமையான குறிப்புதான். உருளைக் கிழங்கு சாறு எடுத்துக்கொண்டு கண்களைச் சுற்றிலும் பஞ்சால் ஒத்தடம் தர வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வாருங்கள். கருவலையம் நீங்கும்.

karuvalaijam1

தக்காளி சாறு: தக்காளி சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து பருத்தித் துணியில் நனைத்து கண்களைச் சுற்றி தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை தினம் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ பை: க்ரீன் டீ பையை தண்ணீரில் நனைத்து இரு கண்களிலும் அப்படியே வைத்து 10 நிமிடங்கள் அமரவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கண்களைச் சுற்றிலும் கருமை நீங்கிவிடும்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு பழச் சாறை கண்களை மூடி ஒத்தடம் தாருங்கள். பின் ஆரஞ்சு பழ சாறில் முக்கி எடுத்த பருத்தித் துணியை கண்களில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். கருவலையம் பறந்து போகும்.

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை பலரும் குளிர்ச்சிக்காக கண்களில் வைத்திருக்கக் கூடும். பெரும்பாலும் பார்லர்களில் ஃபேஷியலுக்கு வெள்ளரிதான் பயன்படுத்துவார்கள். இது குளிர்ச்சிக்கு மட்டுமல்ல. கண்களின் கருவலையத்தையும் போக்கும். வெள்ளரியின் சாறு பிழிந்து அதை பருத்தித் துணியால் நனைத்து ஒத்தடம் கொடுங்கள். பின் வெள்ளரி ஸ்லைசை கண்களில் 5 நிமிடங்கள் வைத்துக் ஒய்வெடுங்கள்.

கற்றாழை சாறு : கற்றாழை அழகு குறிப்பில் எப்போதும் இடம் பெறும். அந்த வகையில் கற்றாழை கருவலையத்தையும் நீக்கி கண்களுக்குக் குளிர்ச்சி தரும். கற்றாழை சாறு எடுத்து அதை பஞ்சில் நனைத்து கண்களைச் சுற்றித் தடவவும். இதை தினமும் செய்து வந்தால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்.

Related posts

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

sangika

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும் முட்டை

nathan

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika

அடேங்கப்பா! உருளைக்கிழங்கு கூட சருமத்தை பாதுகாக்கிறதா..?

nathan

குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்க இதை செய்யுங்கள்….

sangika

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் பலன்கள்..!!

nathan

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

nathan

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika

உண்மையை உடைத்த சுந்தர் சி! குஷ்பூ கோவிலை பார்த்து பொறாமைப்பட்டேனா ?..

nathan