26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
boys hair cut
ஆண்களுக்குஅழகு குறிப்புகள்

இந்த பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்!…

முடியிலும் பிரச்சினையா..?

இப்போது உள்ள வாழ்க்கை பிரச்சினைகளை விட முடி சார்ந்த பிரச்சினைகள் தான் அதிகம். அதிலும் இதை மிக பெரிய சந்தையாகவே பல கார்ப்பரேட்டுகள் மாற்றி விட்டன. முடியை வைத்து செய்யும் வியாபாரங்களும் கொடி கட்டி பறக்கிறது. இந்த முடி பிரச்சினையை தீர்க்க முடி வெட்டுதலும் ஒரு வகையில் உதவுகிறதாம்.

boys hair cut

சுருட்டை முடியா..?

உங்களின் முடி சுருட்டை சுருட்டையாகவும், அடர்த்தியாகவும் உள்ளதா..? அப்போ நீங்கள் 6 முதல் 8 வாரத்திற்கு ஒரு முறை முடியை வெட்ட வேண்டும். இல்லையென்றால் முடி உடைய ஆரம்பித்து விடும். மேலும், உங்களுக்கு சீக்கிரமாகவே முடி வளர்ந்து விட்டால் இந்த கால இடைவெளிக்கு முன்னரே முடி வெட்டலாம்.

நேரான முடிகளா..?

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே. நீங்கள் 5-6 வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்டலாம். இந்த வகை முடியினருக்கு முடியில் வெடிப்பு இருக்க கூடும். ஆதலால் இந்த கால இடைவெளி முக்கியம்.

நீளமான முடிகளா..?

இந்த வகை காரர்களுக்கு முடி அதிக நீளமாகவும் பல லேயர்களும் இருக்கும். இவர்கள் 6 முதல் 8 வார கால இடைவெளியில் முடியை வெட்டலாம். மேலும், இவர்கள் சிறிதாக முடி வெட்டினால் இதன் வளர்ச்சி விரைவிலே அதிகரிக்க கூடும்.

சிறிய முடியா..?

உங்களின் முடி எப்போ வெட்டினாலும் சிறிய அளவிலே வளர்கிறதென்றால் நீங்கள் இந்த கால இடைவெளியில் முடி வெட்ட வேண்டும். குறிப்பாக 4 வாரத்திற்கு 1 முறை இவர்கள் முடியை வெட்ட வேண்டும். அப்போதுதான், முடியின் வளர்ச்சி அதிகரிக்க செய்யும்.

பாப் கட்டிங்கா..?

சில ஆண்கள் அல்லது பெண்கள் டீ.ர்-ரை போன்ற பாப் கட்டிங்க் செய்து கொள்வார்கள். இவர்கள் 6 வாரத்திற்கு ஒரு முறை முடியை வெட்டலாம். மேலும், இந்த இடைவெளி முடியின் அடர்த்தியை அதிகரித்து, அழகான பொலிவை தரும்.

அதிகம் பாதிக்கபட்ட முடியா..?

கெமிக்கல் பொருட்களின் பயன்பட்டால் அதிகமாக உங்கள் முடி சிதைவடைந்துள்ளதா..? அப்போ நீங்க 4 வாரத்திற்கு ஒரு முறை உங்களின் முடியை வெட்ட வேண்டும். அப்போதுதான் உங்களின் முடி விரைவாகவே குணமாகும். அத்துடன் முடியின் வேரையும் இது சரி செய்து விடும்.

மெல்லிய முடியா..?

சிலருக்கு முடி அதிகமாக கொட்டியதாலும், மரபு ரீதியாகவும் முடி மெல்லிதாக இருக்க கூடும். இந்த பிரச்சினையை தீர்க்க முடியை இந்த இடைவெளியில் வெட்டினாலே சிறந்தது. 4 முதல் 6 வார இடைவெளியில் வெட்டினால் மெல்லிய முடி அடர்த்தியாக தெரிய கூடும்.

Related posts

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

வெளிவந்த தகவல் ! பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவரும் வெளியேற போகிறாரா ?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம்

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

உங்கள் முகம் அழுக்காக உள்ளதா? இதோ வோட்கா பேஷியல்

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika