23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pimple3
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்புமுகப்பரு

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

பருக்கள்- பலரின் முகத்தை அழகு செய்ய உதவுகிறது; சிலரின் முகத்தை கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கும் தள்ளுகிறது. சிலர் முகத்தின் அழகை கெடுப்பதே இந்த பருக்கள் தான் என நினைத்து கொள்கின்றனர். பருக்கள் உண்டாகினால் அதை புற்றுநோய் கட்டிகள் என்றும் சிலர் நினைத்து விடுகின்றனர். பருக்கள் முகத்தில் மட்டும் தான் உருவாகும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது அப்படி கிடையாது.

முகம், கழுத்து, தோள்பட்டை, அக்குள், பிறப்புறுப்பு போன்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் பருக்கள் உண்டாகும். இப்படி உங்களை பாடாய்படுத்தும் பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள் உள்ளன. இதற்கு நீங்கள் ஆயிர கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டியதில்லை. இனி முகப்பருக்களை எப்போதுமே உருவாகாமல் தடுக்கும் புதுவித டயட் முறையை பார்க்கலாம்.

pimple3

பருவும் உருவும்..!

பருக்கள் உடலில் தோன்றுவதற்கு சில முக்கிய காரணிகள் உண்டு. குறிப்பாக அதிக அளவில் கார்போஹைடிரேட், எண்ணெய் உணவுகள், பொரித்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் ஹோர்மோன் சீரான முறையில் உற்பத்தி ஆகாது. இவை எண்ணெய் சுரப்பிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து பருக்களை உருவாக்கும்.

ஜின்க்

சாப்பிட கூடிய உணவில் அன்றாடம் ஜின்க் நிறைத்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலே நல்ல பலனை அடையலாம். பூசணி விதைகள், முந்திரி, கடல் உணவுகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்தால் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

வைட்டமின் எ

பருக்களை பற்றிய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் பருக்களில் இருந்து உங்களை காக்கும். ஆகவே கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முளைக்கீரை, பாதாம் போன்ற உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.

நீராகாரங்கள்

பருக்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் எல்லோருக்கும் டார்க் சாக்லேட், யோகர்ட், மோர், ஊறுகாய் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் இதன் பிடியில் இருந்து தப்பலாம். மேலும், முகத்தின் அழகும் கூடும்.

ஒமேகா 3

மீன், முட்டை, வால்நட்ஸ், சீயா விதைகள் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் பருக்களின் பாதிப்பு இருக்காதாம். அத்துடன் உடலில் உண்டாக கூடிய வீக்கங்கள், கட்டிகள் போன்றவையும் குறைந்து விடும்.

கிரீன் டீ

பருக்களை தடுக்கும் ஆற்றல் கிரீன் டீயிற்கு உள்ளதாம். தினசரி காலை வேளையில் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் பருக்களினால் உண்டாகும் பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

ஜுஸ்

தாக்களி, பப்பாளி, தர்பூசணி, ப்ரோக்கோலி, அண்ணாச்சி போன்றவற்றை ஜுஸ் தயாரித்து குடித்து வந்தால் பருக்கள் பாதிப்பு இருக்காது. மேலும், இந்த ஜுஸ்கள் அதிக ஆற்றலை உடலுக்கு தந்து, நோய்களின் பிடியில் இருந்தும் நம்மை காக்கும்.

சர்க்கரை

குறைந்த சர்க்கரை அளவு உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இதுவே அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் பருக்கள் அதிக அளவில் உருவாகும். ஆதலால் மேற்சொன்ன உணவு முறையை கடைபிடித்து வந்தால் பருக்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

Related posts

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika

அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு திறமையா? ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்:

nathan

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்கும் எலுமிச்சை

nathan

உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர் : ஸ்வப்னா சுரேஷ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற….

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan