25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
teeth
அழகு குறிப்புகள்

காலையில் எழுந்ததும் எதனை கொண்டு பல துலக்குகுறீர்கள்!…

பல்பொடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோபால் மற்றும் நஞ்சன் கூடு என்ற இரண்டு பிராண்டு பல்பொடி ( #Pepsodent ) மட்டுமே. இந்த இரண்டும் முதலில் பிரவுன் கலர் காகித பையில் வந்தது பிறகு பிளாஸ்டிக் கவரில் வந்தது. நஞ்சன்கூடு இரண்டு விதமாக வந்தது .கோல்கேட் ( #Colgate) பவுடர் மற்றும் டூத் பேஸ்ட் ( #ToothPaste ) இரண்டும் வர ஆரம்பித்தது.

பிறகு பெப்ஸோடேண்ட் ( #Pepsodent ) கோயம்புத்தூரில் இருந்து வந்தது. SR .என்ற பெயரில், நீம் என்ற பெயரில் வேப்பிலை படத்துடன், மிண்டீ என்ற பெயரில் கேரளா வில் இருந்து வந்தது. பினாகா என்ற பெயரில் வந்த பேஸ்ட்கூட சிறுசிறு பொம்மை கள் இலவசமாக வழங்கப்பட்டு.

இந்த கம்பெனி பிறகு சிபாகா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. என்னதான் இத்தனை பெயரில் பல்பொடி மற்றும் பேஸ்ட் வந்தாலு ம் கிராமத்து மக்கள் கரி ( #Charcoal powder ), காப்பி பொடி ( #Coffee Powder ), சாம்பல் கொண்டு தான் பல்சுத்தம் செய்வார்கள்.

teeth

மேலும் அப்போது பல்வலி ( #Teeth #Tooth #Pain ) என்றால் கிராம்பு, நார்த்தங்காய் போன்றவை வைத்து சரி பண் ணிணார்கள். இவ்வளவு பல்டாக்டர்கள் கிடையாது.

ஆனால் இப்போது கோல்கேட் கம்பெனியே உப்பு ( #Salt ), கரி ( #Charcoal Powder ) என்ற பெயரில் பேஸ்ட் விற்பனை செய்கின்றனர். புகழ்பெற்ற பாண்ட்ஸ் ( #Ponds ) முக பவுடர் தயாரிக்கும் கம்பெனியும் பாண்ட்ஸ் என்ற பெயரில் பல்பொடி மற்றும் பேஸ்ட் தயாரிப்பு செய்தது யாருக்காவது ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டு இருந்தபோது… என் மகள், அப்பா பல்வலி டாக்டர் வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடவே இத்துடன் பல்பொடி புராணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, பல் டாக்டர் மருத்துவமனை ( #Dental #Hospital )க்கு அழைத்துச் சென்றேன்.

Related posts

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் அதற்கு சிறப்பான தீர்வு!

sangika

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika

நெற்றியில் கொப்புளங்கள் வந்த இடங்களில் இதனை மட்டும் செய்யுங்கள் போதும்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஏமாற அதிக வாய்ப்பிருக்காம்…

nathan

முகப்பருக்கள் மறைய

nathan

முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை இவ்வாறு பயன்படுத்துங்கள்!….

sangika

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு என்ன தெரியுமா?

sangika