25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
mark in face
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா? இருக்கட்டும் என்று யாரும் அதனைப் பற்றிகவலைப்படாமல் இருக்க முடியாது.அவற்றை நீக்க எங்கே விளம்பரங்கள் வந்தாலும் அதனை தேடி ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். ஆனால் பலன் என்னமோ ஜீரோதான்.கடைகளில் விற்கப்படும் மருந்துகளில், விட்டமின் ஈ, சில ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மாய்ஸ்ரைஸ்ர் அவ்வளவுதான் இருக்கும். இதைக் கொண்டு எந்த தழும்பும் போனதாக நிரூபிக்கப் படவில்லை.

தழும்புகளை போக்க இப்போது பரவலாக சில இயற்கை பொருட்களை உபயோகித்தாலும் அவை எல்லாமுமே பலன் தராது. மேலும் சில விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அப்படி தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவைகளை இப்போது பார்க்கலாம்.

mark in face

பயன்படுத்தக் கூடியவை :

எலுமிச்சை சாறு :எலுமிச்சை சாற்றில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. அது பாதிக்கப்படத்தில் உருவான திசுக்களின் மேல் வினைபுரிந்து அவற்றை இலகுவாக்கிறது. இதனால் மெல்ல தழும்புகள் மறையும். எலுமிச்சை சாறை தழும்பின் மீது தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்னர் கழுவலாம்.

தேன்+ சமையல் சோடா :

2 ஸ்பூன் தேனில் 2 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து, தழும்புகளில் தேயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். விரைவில் தழும்பு மறையும்

கற்றாழை :

கற்றாழையின் சதைப்பகுதி பாதிக்கப்பட்ட திசுக்களை ரிப்பேர் செய்து புதிய செல்கள் அங்கே உருவாக தூண்டுகிறது. காற்றாழையின் சதையை எடுத்து தழும்பு உள்ள பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

பயன்படுத்தக் கூடாதவை :

ஹைட்ரஜன் பெராக்ஸைட் :ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கக் கூடாது இதில் உள்ள இயற்கையான கெமிக்கல் சருமத்துடன் வினைபுரிந்து அதிக ஆக்ஸிஜனை உருவாக்கி, அங்கே சரும திசுக்களை பாதிக்கச் செய்யும்.ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கக் கூடாது இதில் உள்ள இயற்கையான கெமிக்கல் சருமத்துடன் வினைபுரிந்து அதிக ஆக்ஸிஜனை உருவாக்கி, அங்கே சரும திசுக்களை பாதிக்கச் செய்யும்.

விட்டமின் ஈ எண்ணெய் :விட்டமின் ஈ எண்னெயை தழும்பில் உபயோகிக்கக் கூடாது. இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் புதியதாக தழும்பை ஏற்படுத்திவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்

வெயில் படக் கூடாது :வெயில் தழும்புகளில் மேல் பட்டால் அது மறையும் காலமும் நீடிக்கும். ஆகவே வெயில் படாமல் காக்க வேண்டும். அவற்றிலுள்ள சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர்கள் தழும்பினை பாதிக்கும்

Related posts

வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்க

nathan

உங்களுக்கு தெரியுமா பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா…?

nathan

வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்

nathan

கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை சூப்பர் 15 குறிப்புகள்!

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

அழகு குறிப்புகள்:பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan