25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cocount oil for skin
சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்புநகங்கள்முகப் பராமரிப்பு

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

எப்போதும் இளமையாக இருக்க வாரத்தில் 1 நாள் தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க
உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய் பால் குளிர்ச்சியானது. அதிக புரதச் சத்துக்கள் கொண்டது. வயிற்றுப் புண்களை ஆற்றும். புது செல்களை உருவாக்கும். அதிக ஆன்டி ஆக்ஸெடெட்ன் நிறைந்தவை.

தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது.

தேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

cocount oil for skin

நிறம் பெற :

கேரட் சாறு – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
செய்முறை :
இரண்டையும் சம அளவு கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.

எண்ணெய் வடிவதை தடுக்க :

தேவையானவை :

முல்தானிமட்டி – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
செய்முறை :
இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

மாசு மருக்கள் விலக :

தேவையானவை :

தேங்காய் பால் – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
செய்முறை :
இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக்போட்டு வர முகம் பிரகாசமாகும். இதில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

கரும்புள்ளி நீங்க :

தேவையானவை :

உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
பயிற்றம் மாவு – 1 டீஸ்பூன்
செய்முறை ;
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ”பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

உடலைக் குளிர்ச்சியாக்க :

இளநீரில் இருக்கும் வழுக்கையை எடுத்து தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள் குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு சில நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் ஒரு முறை செய்தால் போதும். சருமமும் பொலிவு பெறும். பித்தத்தால் வரும் பாதிப்புகள் விலகும்.

கருமையான கூந்தல் பெற :

தேவையானவை :

நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
மருதாணி பவுடர் – 1 டீஸ்பூன்
வெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 2 டீஸ்பூன்
செய்முறை :
இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருமையான கூந்தல் பெறுவீர்கள்.

Related posts

கிளீன் அண்டு கிளியர் சருமம். பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!

nathan

மருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி

nathan

உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

ஸ்பா நீராவிக் குளியல்

nathan

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

உங்களுக்கு மின்னும் சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்!

nathan

இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்……

sangika

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan