ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது எது? நிச்சயமாக சருமமும் தலைமுடியும்தான். முடியில், கருமையான முடிகளே அழகு
எனவே, பெரும்பாலான மக்களின் தேவையான இந்த சாயத்தை இயற்கை முறையில் செய்வது எப்படி என இங்கே படித்து தெரிந்துகொண்டு முயற்சி செய்து பாருங்கள்.
இயற்கை சாயம்…
இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக் கேசத்தைப் பெறலாம்; இளமைப் பொலிவான தோற்றமும் பெறலாம்.
இயற்கை சாயம் செய்ய உதவும் சில செய்முறைகள்…
தேவையானவை:
தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி – தலா 3 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும்.
பிறகு கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரை முடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம்.
இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்