33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
ac8e5191e98a9d726b25a27615b0f614
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

சருமப் பராமரிப்பு

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க. இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தைஇயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

இந்த அவசர உலகத்தில் நம்முடைய முகத்தை பராமரிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகு படுத்தினாலும் பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாது ஒன்று. இதில் எந்த கெமிக்கல்களும் இருப்பதில்லை. சரி வாங்க உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்புகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ac8e5191e98a9d726b25a27615b0f614

பப்பாளி – லெமன் ஜூஸ்

பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

க்ரீன் டீ – தேன்

க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பாதாம் – தேன்

பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும ஜொலிப்பை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்து நல்ல பளபளப்பை கொடுக்கும்.

பயன்படுத்தும் முறை

10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.

கற்றாழை ஜெல் – க்ரீன் டீ

சரும ஜொலிப்பை தரக் கூடிய அனைத்து விட்டமின்களும் மினிரல்கள் கற்றாழையில் அமைந்துள்ளது. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ பொடியை சேருங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் ஜூஸ்

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் லெமன் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 20-30 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் சீக்கிரமே உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

இந்த இரண்டும் சேர்ந்து ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்து மெதுவாக தேயுங்கள். 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதுமானது. 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படியே செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் குறைய ஆரம்பித்து விடும்.

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் தேன்

1/2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே நீங்கள் பருக்களற்ற முகத்தை பெறலாம்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஓரிரு நாட்களில் பருக்களின் வீரியம் குறைந்து மறைந்து விடும்.

Related posts

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan

சரும நிறம் மாறி பளீச் அழகு பெற…..

nathan

இதை ட்ரை பண்ணுங்க.! முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா?

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் – Best Beauty Secrets of Indian Women

nathan

சருமமே சகலமும்…!

nathan

இவ்வாறான பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்……

sangika

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர் -அதிர்ச்சி சம்பவம்

nathan

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இரவில் இதை செய்ய மறக்காதீங்க…

nathan