கூந்தல் அடர்த்தியா இல்லையென்று நிறைய பேர் கவலைப்படுவதுண்டு. இன்றைய காலக்கட்டங்களில் இடுப்பளவு முடி இருந்தாலே அதிசயம். அதுவும் அடர்த்தி இல்லாத மெலிதான கூந்தல் குறிப்பாக ஆண்களுக்கு அடர்த்தி குறைந்து மண்டை தெரியுமளவுக்கு இருக்கிறது. அதற்கு நமது மாறிவிட்ட வாழ்க்கை முறைதான் காரணம்.
வெந்தயம் அடர்த்தியான கூந்தலுக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதனை பலவிதங்களில் உபயோகப்படுத்தலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் முறை புதியது. முயற்சித்துப் பாருங்கள்.
தேவையானவை :
வெந்தயம் – கையளவு
கடலை மாவு – 3 ஸ்பூன்
யோகார்ட் – 1 ஸ்பூன்
செய்முறை :
வெந்தயத்தை முந்தைய இரவே ஊற வைத்திவிடுங்கள்.
பின்னர் அதனை மறு நாள் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் வெந்தயத்தை போடவும்.
அதன் பின் கடலை மாவையும் சேருங்கள்.
பிறகு யோகார்ட்டையும் கலந்து அரைக்கவும்.
இந்தபேஸ்ட்டை தலையில் தடவவும்.அரை மணி நேர கழித்து தலைமுடியை அலசவும்.
வாரம் மூன்று நாட்கள் செய்தால் எலிவால் அடர்த்தியாக மாறுவது நிச்சயம்.