35.1 C
Chennai
Monday, Jul 14, 2025
hairfall2
கூந்தல் பராமரிப்பு

முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்!…

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.

இங்கு வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் அற்புத இயற்கை சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி வளர்வதைக் காணலாம்.

hairfall2

பட்டை

பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.,

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, வளர்ச்சியையும் தூண்டும்.

தேவையான பொருட்கள்:

பட்டை
ஆலிவ் ஆயில்
தேன்

செய்முறை #1

முதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

பின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலச வேண்டும்.

குறிப்பு

இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்

Related posts

பொடுகு, இளநரை!! தடுக்கலாம் விரட்டலாம்!- வீட்டிலேயே தீர்வு ரெடி

nathan

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

nathan

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

nathan

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

sangika

பொடுகுத் தொல்லையா?

nathan

இதோ உங்களுக்காக..!! இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க முயன்று பாருங்கள்!…

sangika