hair5
கூந்தல் பராமரிப்பு

இயற்கையான முறையில் கூந்தலை வளர்க்க சூப்பர் டிப்ஸ்!…

அடர்த்தியான நீளமான முடியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம்.மேலும், பல பெண்கள், காதுப்படவே, ஆண்கள் “முடிதான் மச்சான் பொண்ணுக்கு அழகு” எனக்கூறுவதை கேட்கும் எந்த பெண்ணிற்கு தான் முடிவளர ஆசை இல்லாமல் இருக்கும்?

முடியை வளர்க்க கண்ட எண்ணெய், ஷாம்பு, என உபயோகிக்காமல் இயற்கையான முறையில் கூந்தலை வளர்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

hair5

முட்டை மாஸ்க்:

முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அத்துடன் 1 கப் பால், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியமாக வளரும்.

வாழைப்பழ மாஸ்க்:

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஆயில் மசாஜ்:

வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெயை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் ஸ்கால்ப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, முடி வலிமைப் பெறும்.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெயில் முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து குளித்தல் முடி நன்றாக வளரும்.

Related posts

முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்!…

sangika

இளநரையை தடுக்கும் வீட்டு தயாரிப்பு ஷாம்பு

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika

துர்நாற்றத்தை உங்கள் கூந்தலில் இருந்து விரட்டி, நறுமணத்தைக் கொண்டு வர மிக எளிய தீர்வுகள்!…

sangika

முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.

nathan

சிறிய குழந்தைகளுக்கு 5 நிமிட சிகை அலங்காரங்கள்

nathan

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika