29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hair care
அழகு குறிப்புகள்கூந்தல் பராமரிப்பு

கூந்தலுக்கு போஷாக்கை கொடுத்து அரிப்புடன் கூடிய பொடுகை நீக்க எளிய இயற்கை வழி முறைகள்!…

தலையில் பொடுகு வந்துட்டாலே போதும் அரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. எப்பொழுதும் சொரிஞ்சு கிட்டே இருக்க தோனும். அது மட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையிலும் சங்கோஜத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் எண்ணெய் பசை கூந்தல் என்றால் பொடுகு ஒட்டுக் கொண்டு அவ்வளவு சீக்கிரம் போகவும் போகாது.

இந்த பொடுகு தொல்லையை மட்டும் தருவதாடு முடி உதிர்வு, முகத்தில் அரிப்பு, தலையில் புண் மற்றும் அரிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதை போக்க சில எளிய இயற்கை வழி முறைகள் உள்ளன. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

hair care

டீ ட்ரி ஆயில்

இந்த ஆயிலில் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இது பொடுகை எதிர்த்து போரிடுகிறது. இது பூஞ்சை அழற்சி போன்றவற்றை போக்கி தலையில் ஏற்படும் அரிப்பை அடக்குகிறது.

புரோபயோடிக் உணவுகள்

புரோபயோடிக் உணவிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் பொடுகை எதிர்த்து போரிடுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து பொடுகுக்கு காரணமான பூஞ்சை தொற்றை அழிக்கிறது. எனவே புரோபயோடிக் உணவுகள் அல்லது மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓமேகா 3

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியமானது. வறண்ட பொலிவிழந்து கூந்தல் தான் பொடுகுக்கு காரணமாகின்றன. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு போஷாக்கை கொடுத்து அரிப்புடன் கூடிய பொடுகை நீக்குகிறது.

அஸ்பிரின்

இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளை எடுத்து பொடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி தலையில் அப்ளே செய்யுங்கள். அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு அலசி விடுங்கள்.

பேக்கிங் சோடா

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் ரோஸ் மேரி எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். அதை நன்றாக குலுக்கி விட்டு தலையில் நன்றாக ஸ்ப்ரே செய்து விடுங்கள். தலையில் உள்ள பொடுகு அனைத்தும் போய்விடும். பிறகு சாம்பு கொண்டு முடியை அலசி விடுங்கள்.

லிஸ்ட்ரைன் சிகிச்சை

எண்ணெய் பசை கூந்தலை சமாளிக்க லிஸ்ட்ரைன் பயன்படுகிறது. 2 பங்கு தண்ணீர் மற்றும் ஒரு பங்கு லிஸ்ட்ரைன் சேர்த்து கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள். எப்பொழுதும் போல உங்கள் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள். இப்பொழுது லிஸ்ட்ரைன் திரவத்தை தலையில் ஸ்ப்ரே செய்து 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். உங்கள் கூந்தலில் உள்ள எண்ணெய் பசை, பொடுகு நீங்கி கூந்தல் பளபளக்கும்.

லெமன்

எண்ணெய் பசை கூந்தலில் உள்ள பொடுகை நீக்க லெமன் ஜூஸ் பயன்படுகிறது. லெமன் ஜூஸை தலையில் அப்ளே செய்யும் பொடுகு, எண்ணெய் பசை நீங்கி விடும். ப்ரஷ்ஷான லெமன் ஜூஸை கைகளில் எடுத்து தலை முழுவதும் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு தலையை அலசி விடுங்கள். பொடுகு நீங்கிவிடும்.

வேப்பிலைகள்

ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து 4-5 கப் சூடான நீரில் ஊற்றவும். 4-5 கப் தண்ணீரை முதலில் சூடுபடுத்தி கொள்ளுங்கள். அப்புறம் அதில் வேப்பிலையை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு நன்றாக கொதிக்க விட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு உங்கள் தலை முடியை அலசுங்கள். வேப்பிலையில் உள்ள கிருமி எதிர்ப்பு தன்மை தலையில் உள்ள பொடுகை போக்கி விடும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலை காயப்போட்டு பொடியாக்கி கொள்ளுங்கள். 4-5 ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸை எடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் தலை மற்றும் கூந்தலில் நன்றாக அப்ளே செய்யுங்கள். 20-30 நிமிடங்கள் காய வைக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசுங்கள். பொடுகு நீங்கி விடும்.

 

Related posts

பல் வலியை போக்கும் வெங்காயம் எப்படி என்று தெரியனுமா? அப்ப உடனே இத படிங்க…

sangika

மனோபாலாவின் மனைவி யார் என தெரியுமா?நீங்களே பாருங்களன்!!!

nathan

மேக்கப் மூலம் ஒருவரைடிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்……

sangika

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

முகப்பருவை சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வீட்டிலேயே சரிசெய்ய முடியும்.

nathan

இதை ட்ரை பண்ணுங்க.! முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா?

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு பிரபுதேவா இப்படி மாறிவிட்டாரே?

nathan